For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்டியே விமானத்துலேந்து குதிச்சு கிகி சேலஞ்ச் பண்ணு தலைவா!.. எச் ராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: தலைவா அப்படியே விமானத்தில் இருந்து குதிச்சி கிகி சேலஞ்ச் பண்ணுங்க தலைவா என்று எச் ராஜாவை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

எச் ராஜா என்றாலே பாரபட்சமின்றி கலாய்ப்பதில் நம் நெட்டிசன்களுக்கு நிகர் அவர்களே ஆவர். எப்போதும் எதை பற்றியாவது யார் பற்றியாவது டுவிட்டரில் போட்டு விட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார் எச் ராஜா.

தற்போது ஜெட் ஏர்வேஸை ராஜா வறுத்தெடுத்ததை பார்த்துவிட்டு நெட்டிசன்களும் பதிலடி கொடுத்துள்ளனர்.

ராஜா கொதிப்பு

ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஜெட் விமானத்தில் பயணிப்பதே பயனில்லாத ஒன்றாகும். 40 நிமிடங்கள் தாமதமானது. போதிய எரிபொருள் இல்லாததால் டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானம் ஜெய்ப்பூரில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கியது. நேரத்தை மதிக்காத ஒரு விமான நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்தது அறிவற்ற செயல். பயணிகள் குறித்து அவர்களுக்கு கவலையில்லை என்று நேற்று நள்ளிரவு பதிவிட்டிருந்தார். இதற்கு ஜெட் ஏர்வேஸ் உரிய விளக்கம் கொடுத்துள்ளது.

விளக்கம்

விளக்கம்

இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கூறுகையில் விமானம் 9 டபிள்யூ 736 ஆனது டெல்லியில் விமான போக்குவரத்து நெரிசல் காரணமாக மட்டுமே ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. விரைவில் உங்களை டெல்லியில் தரையிறக்குவோம் என்று அந்த நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கிகி சேலஞ்ச்

தலைவா அப்டியே விமானத்துலேந்து குதிச்சு கிகி சேலஞ்ச் பண்ணு தலைவா. வீ ஆர் வெயிட்டிங்...

கலவரத்தை உண்டு செய்யுங்கள்

சார் இது பாகிஸ்தான் சதி. விமானி ஆண்டி இந்தியன்னு சொல்லி கலவரத்தை ஏற்படுத்துங்கள்.

ஜாலிதான்

அட்மினுக்கு வந்த வாழ்வை பாருங்க. அவரு உங்கள விமானத்துலல்லாம் அனுப்பி வச்சிருக்காரு. ஜாலிதான்

புஷ்பக விமானம்

தலைவா பெட்ரோல் போட்டாங்களா இல்லையா??? நான் புஷ்பக விமானம் கொண்டு வரட்டா சும்மா ஜொய்ங்கனு போகும்....

English summary
H.Raja says in twitter page that The futility of traveling by JET airways. It took off 40 mins late. Don't have sufficient fuel to take few more rounds to get permission to land in Delhi. Now landed at Jaipur for refueling. Unwise to travel by airlines which has no respect for time. No concern for passengers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X