For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெச்.ஏ.எல். இமெயில் ஐடியை ஹேக் செய்த விஷமிகள்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஹேக் செய்யப்பட்ட இமெயில் ஐடியில் இருந்து எந்தவித முக்கிய தகவல்களும் கசியவில்லை என இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.

பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டின்(ஹெச்.ஏ.எல்.) இமெயில் ஐடியில் இருந்து திங்கட்கிழமை மாலை மீடியாக்களுக்கு மெயில் வந்தது. ஆனால் அந்த மெயிலில் இருந்த லிங்க்கை கிளிக் செய்தால் அது வேலை செய்யவில்லை. பின்னர் தான் [email protected] என்ற அந்த இமெயில் ஐடி ஹேக் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து ஹெச்.ஏ.எல். அதிகாரி ஒருவர் கூறுகையில்,

Hacked email ID contained no sensitive info: HAL

எந்தவொரு முக்கிய தகவலையும் அனுப்ப அந்த இமெயில் ஐடியை இதுவரை பயன்படுத்தியது இல்லை. மீடியாவை தொடர்பு கொள்ள மட்டுமே அந்த ஐடியை பயன்படுத்தி வந்தோம். அதிகாரப்பூர்வ இமெயில் ஐடி இருப்பினும் மீடியாக்களின் வசதிக்காக ஜிமெயில் கணக்கை வைத்திருந்தோம். ஜிமெயில் கணக்குகள் மூலம் பெரிய ஃபைல்களை அனுப்பலாம் என்று நம்பப்படுகிறது. அந்த கணக்கில் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு குறித்து செய்தி அளிக்கும் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச பத்திரிக்கையாளர்களின் இமெயில் ஐடிகள் தான் இருந்தன. அதில் நாங்கள் எந்த தகவலையும் சேகரித்து வைக்கவில்லை என்றார்.

இந்த ஹேக்கிங் குறித்து கர்நாடக போலீஸின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மீடியாக்களுடன் தொடர்பில் இருக்க நினைத்த ஹெச்.ஏ.எல். கடந்த 2005ம் ஆண்டு தான் [email protected] என்ற இமெயில் ஐடியை உருவாக்கியது.

ஹேக் செய்யப்பட்ட ஐடியில் இருந்து கடைசியாக கடந்த 12ம் தேதி அனுப்பப்பட்ட இமெயிலில் இலகு ரக ஹெலிகாப்டரான டிடி3-இன் முதல் பயணம் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஐடியில் இதற்கு முன்பு எந்த பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை. இனி நாங்கள் விழிப்புடன் செயல்படுவோம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English summary
Hindustan Aeronautics Ltd (HAL) said on Tuesday that it lost no sensitive information following the hacking of one of its email IDs on Monday. It was on Monday evening that the members of national media received an email from HAL’s Corporate Communication department with a one-line message.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X