For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துப்பாக்கி முனையில் பெண்கள்? மமதா கட்சி தொண்டர்கள்.. வைரலான வீடியோ.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் சாலையில் உள்ள பெண்களை மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் பாஜகவுக்கு எதிராக திரண்ட எதிர்க் கட்சிகள் மாநாடு ஒன்றை நடத்தின. பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்றதோடு, அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.

மாநாடு வெற்றி என்று எதிர்க்கட்சிகளும், தோல்வி என்று பாஜக மற்றும் ஆதரவு கட்சிகளும் கருத்துகளை கூறி வந்தன. இந் நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

வைரலான வீடியோ

அந்த வீடியோவில் துப்பாக்கியை கையில் பிடித்தபடி முகமூடி அணிந்த நபர் பெண்கள் பலரை மிரட்டுகிறார். பின்னர் குண்டு போன்ற ஒன்றை சுவர் மீது தூக்கி எறிய... அது புகையை கக்கியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.

பெண்கள் மிரட்டல்

பெண்கள் மிரட்டல்

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்ட மாநாட்டுக்கு பெண்களை மமதா பானர்ஜி கட்சி தொண்டர்கள் மிரட்டி அழைத்து வருகின்றனர். இந்துக்களை மிரட்டும் திரிணாமூல் கட்சி தொண்டர்கள் என பல தலைப்புகளில் வைரலாகின. பேஸ்புக், டுவிட்டர் என பலரும் அந்த வீடியோவை பதிவு செய்து பிரச்சாரத்தில் இறங்கினர்.

குவிந்த கண்டனங்கள்

குவிந்த கண்டனங்கள்

இந்த வீடியோவை தொடர்ந்து.. ம்தாவுக்கெதிராக பல இணையத்தில் கண்டனம் எழுப்பினர். மேலும், மேற்கு வங்கத்தில் மம்தா கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள பெண்கள் மிரட்டப்படுகின்றனர் என்றும் புகார்கள் எழுந்தன. இந் நிலையில்... இணையத்தில் வைரலான அந்த வீடியோ போலி என்றும் 2018ம் ஆண்டு ஏப்ரலில் எடுக்கப்பட்டதும் தெரிய வந்தது.

வீடியோ திரிக்கப்பட்டது

வீடியோ திரிக்கப்பட்டது

திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினரான அந்த நபர் மேற்கு வங்க கிராம பஞ்சாயத்து தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய, கடைசி நாள் அன்று, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை துப்பாக்கி கொண்டு வழி நடத்தியது தெரிய வந்தது. இந்த வீடியோதான் தற்போது திரிக்கப்பட்டு இணையத்தில் விஷமிகளால் பரப்பப்பட்டது, கண்டுபிடிக்கப்பட்டது.

English summary
Several social media users are claiming that Trinamool Congress workers forced Hindus of West Bengal at gunpoint to attend the recently organized mega opposition rally in Kolkata. But this is an old video from West Bengal is being used to claim TMC men threatened Hindus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X