For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீ மட்டும் ஆம்பளயா இருந்திருந்தா... பெண் ஊழியரை மிரட்டும் காங். எம்எல்ஏ.... வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஊழியர் ஒருவரைக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் மிரட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Had You Not Been A Woman... Congress MLA Threatens Madhya Pradesh Officer On Camera

அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் காங்கிரஸ் சார்பில் மிகப் பெரிய டிராக்டர் பேரணி நடைபெற்றது. பேரணியை தலைமை தாங்கிய காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்ஷ் விஜய் கெலாட், விவசாய சட்டங்கள் குறித்த புகார் அளிக்க அப்பகுதியுள்ள மாஜிஸ்திரேட் அலுவலகத்திற்குத் தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த மாவட்ட துணை மாஜிஸ்திரேட் காமினி தாக்கூர் வெளியே வர அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அலுவலகத்திற்கு வெளியே தனது ஆதரவாளர்களுடன் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்ஷ் விஜய் கெலாட் கோபமடைந்தார்.

மேலும், மாவட்ட துணை மாஜிஸ்திரேட் காமினி தாக்கூரைப் பார்த்து அவப், "நீ ஒரு பெண்ணாக இருப்பதால் தப்பித்தாய். இதே இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தார், அவர் சட்டையைப் பிடித்து, அவருக்கு மேமோ வழங்கியிருப்பேன்" என்று கோபமாகக் கத்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது தொடர் கதையாகியுள்ளது. கடந்த வாரம்தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மா, பெண்களால் 15 வயதிலேயே குழந்தை பெற்றெடுக்க முடியும்போது, திருமணம் செய்து வைக்க வேண்டிய குறைந்தபட்ச வயதை ஏன் 18இல் இருந்து 21ஆக உயர்த்த வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

English summary
Days after a controversy over a former Madhya Pradesh minister from the Congress making regressive comments against women, a lawmaker from the party has been caught threatening a woman officer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X