For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலா சீதாராமன் சொன்னது பொய்யா..? ரஃபேல் விவகாரம் பற்றி எச்ஏஎல் முன்னாள் தலைவர் பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

பெங்களூர்: ரஃபேல் போர் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டட் (எச்ஏஎல்) தயாரித்து இருக்க முடியும் என்று அந்த அமைப்பின் தலைவராக பணியாற்றிய சுவர்ண ராஜு தெரிவித்துள்ளார்.

3 வாரங்கள் முன்பு வரை சுவர்ண ராஜு எச்ஏஎல் தலைவர் பதவியில் இருந்தவர். இப்போது இந்த விவகாரம் தொடர்பாக வாய் திறந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டு அரசுடன் மத்திய அரசு 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, 36 ரஃபேல் வகை போர் விமானங்களை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

பெரும் பிரச்சினை

பெரும் பிரச்சினை

இதன் மதிப்பு ரூ.59,000 கோடியாகும். இந்த ஒப்பந்த விவகாரம் வெளியே சொல்லப்படவில்லை என்பதால், ஏறத்தாழ தினமும், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் வார்த்தை போர் தொடுத்து வருகிறது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 126 ரஃபேல் விமானங்களை வாங்குவது என்றும், அதில் 108 விமானங்களை பிரான்ஸ்சிடம் பெற்ற உதிரி பாகங்களை கொண்டு எச்ஏஎல் நிறுவனத்தில் தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பாஜக கூட்டணி அரசு இதை மாற்றிவிட்டது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

செவ்வாய்க்கிழமை இதுபற்றி கருத்து தெரிவித்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில், ரஃபேல் விமான தயாரிப்பு திட்டத்தை எச்ஏஎல் கைவிட்டுவிட்டதாகவும், நிபந்தனைகளை பூர்த்தி செய்ய எச்ஏஎல் அமைப்பால் முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

சுகோய் தயாரித்துள்ளோம்

சுகோய் தயாரித்துள்ளோம்

ஆனால் சுவர்ணா ராஜு வேறு விதமாக கூறியுள்ளார். முதல் முறையாக எச்ஏஎல் நிறுவனத்தில் இருந்து ரஃபேல் தொடர்பாக வெளியாகியுள்ள குரல் இதுவாகும். அவர் கூறியதை பாருங்கள்: வெறும் மூலப் பொருட்களை மட்டுமே கொண்டு, நான்காம் தலைமுறையை சேர்ந்த, 25 டன் எடை கொண்ட சுகோய்-30 வகை போர் விமானங்களை எச்ஏஎல் தயாரிக்க முடியும்போது, ரஃபேல் விமானங்களையும் எங்களால் உருவாக்கியிருக்க முடியும்.

தயாரிக்க முடியும்

தயாரிக்க முடியும்

நான் டெக்னிக்கல் குழு தலைவராக ஐந்தாண்டுகளாக பணியாற்றியுள்ளேன். பிரான்ஸ்சைவிட எச்ஏஎல் தயாரிக்கும் ரஃபேல் விமானங்கள் விலை கூடுதலாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், ராணுவ விவகாரங்களில் ஒவ்வொரு விமானத்திற்கான செலவீனம் கணக்கு பார்க்கப்படுவதில்லை. ஆயுட்கால செலவை பார்த்தால் நாம் தயாரிப்பது குறைவான செலவானதாகவே இருக்கும். 100 மணி நேரத்தில் பிரான்ஸ் 100 விமானங்களை தயாரிக்க முடியும் என்றால், எச்ஏஎல்லுக்கு 200 மணி நேரம் ஆகும். பிறகு அதுவே 80 மணி நேரத்தில் செய்து முடிக்கப்பட்டுவிடும் என்றார் அவர்.

English summary
Hindustan Aeronautics Limited (HAL) could have built Rafale fighters in India had the government managed to close the original negotiations with Dassault and had actually signed a work-share contract with the French company, said T Suvarna Raju, who was heading HAL.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X