For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் சரிபாதி பள்ளி மாணவிகள் ‘தம்’ அடிக்கிறார்களாம்: ஓர் அதிர்ச்சித் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் புகைபிடிப்பவர்களில் பள்ளி மாணவிகள் தான் அதிகம் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வே ஒன்று.

மாறி வரும் கலாச்சாரம் இளைஞர்களை அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களை எப்படி பாதிக்கிறது என்பதற்கு இந்த கருத்துக்கணிப்பே உதாரணம். காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுதும் விளையாட்டு' என துள்ளித்திரிய வேண்டிய மாணவ-மாணவிகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகிறார்கள்.

இவற்றிற்கு அவ்வப்போது கவுன்சிலிங் வழங்கப்பட்டாலும் அசம்பாவிதங்கள் குறைந்த பாடில்லை. அந்தவகையில் மன அழுத்தம் காரணமாக போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று தெரியப் படுத்தியுள்ளது.

இதிலும் மாணவிகளே முதலிடம்...

இதிலும் மாணவிகளே முதலிடம்...

டெல்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு ஒன்று நடத்தியது. அதில், மாணவர்களை விட பள்ளி மாணவிகள் தான் அதிகம் புகை பிடிப்பதாக தெரியவந்துள்ளது.

மன அழுத்தம்....

மன அழுத்தம்....

பள்ளி குழந்தைகள் மத்தியில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. புகை பழக்கத்திற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான் என சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் தெரிவித்துள்ளனராம்.

டீன் ஏஜ் பிள்ளைகள்....

டீன் ஏஜ் பிள்ளைகள்....

மேலும், இந்த ஆய்வின் மூலம் புகை பழக்கம் உள்ளவர்கள் 14 வய்து முதல் 18 வயதுக்குள் அதிகமாக இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

49% பேர்....

49% பேர்....

டெல்லியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 700 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது கணக்கெடுப்பில் 49 சதவீதம் பேர் புகையிலை பொருட்கள் வழக்கமாக பயன்படுத்துபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

English summary
A recent study carried out by the Indian Council for Medical Research (ICMR) has found that at least half the school student population in Delhi consumes tobacco in some form. The survey, which claims that high consumption of tobacco among school children is on the rise, says stress is a major cause that urges them to consume tobacco products.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X