For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன அனுமன் தலித்தா? யோகிக்கு எதிராக அதிரடி நோட்டீஸ்.. யார் அனுப்புனதுன்னு பார்த்தா தலை சுத்தும்!

அனுமான் ஒரு தலித் என்று உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் பிராமண சங்கம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அனுமான் ஒரு தலித்... யோகி ஆதித்யநாத் ராஜஸ்தானில் வாக்கு சேகரிப்பு- வீடியோ

    ஜெய்ப்பூர்: அனுமான் ஒரு தலித் என்று உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் பிராமண சங்கம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

    கடந்த வாரம் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தலுக்காக உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் தீவிர பிரச்சாரம் செய்தார். ராஜஸ்தானில் வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    இதில் பேசிய ஆதித்யநாத் அனுமான் ஒரு தலித், அதனால் தலித் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். இதுதான் தற்போது ராஜஸ்தான் பிராமண சங்கத்தை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    யோகி ஆதித்யநாத் தனது பேச்சில், அனுமான் ஒரு தலித். அவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அவர் இந்தியா முழுக்க இணைந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ராமரின் ஆசையும் அதுதான். தெற்கும் வடக்கும், மேற்கும் கிழக்கும் இணைந்து இருக்க ஆசைப்பட்டார். அதை நாம் நிறைவேற்ற வேண்டும். பாஜக அதை நிறைவேற்றும், என்று கூறினார்.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    ஆதித்யநாத்தின் இந்த கருத்திற்கு பல கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஜாதியை வைத்து இப்படி அரசியல் செய்வது மிகவும் கேவலம் என்று கண்டனமும் தெரிவித்து இருந்தனர். முக்கியமாக காங்கிரஸ் கட்சி, இவரது பேச்சு அருவருப்பான பேச்சு என்று விமர்சனம் செய்து இருந்தது.

    நோட்டீஸ் அனுப்பியது

    நோட்டீஸ் அனுப்பியது

    இந்த நிலையில் ராஜஸ்தான் பிராமின் மஹா சபா என்ற பிராமண இயக்கம் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. அனுமன் குறித்து ஆதித்யநாத் சொன்னது முழுக்க முழுக்க தவறு என்று விமர்சனம் செய்துள்ளனர். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    என்ன சொல்கிறது

    என்ன சொல்கிறது

    இது தொடர்பாக ராஜஸ்தான் பிராமின் மஹா சபா தலைவர் சுரேஷ் மிஸ்ரா தனது நோட்டிசில் ''யோகி ஆதித்யநாத் அனுமாரை தலித் என்றது தவறு. அது வருத்தம் அளிக்கிறது. இது பல மக்களின் மனதை துன்புறுத்தி இருக்கிறது. இதை அவர் தேர்தல் அரசியலுக்காக பேசி இருக்கிறார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். பிராமண சமூகத்துடன் நெருக்கமாக இருக்கும் யோகியை, அவர்களே எதிர்த்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Hanuman Was a Dalit Tribal Row: Legal notice against Yogi Adityanath.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X