For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2002 குஜராத் வன்முறைகளுக்கு மோடிதான் காரணம்- ஹர்திக் படேல் பகிரங்க குற்றச்சாட்டு

By Mathi
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளுக்கு அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என்று படேல் போராட்டக் குழுத் தலைவர் ஹர்திக் படேல் கூறியுள்ளார்.

படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டுக்காக ஹர்திக் படேல் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.

இதனைத் தொடர்ந்து ஹர்திக் படேல் உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்குகள் பாய்ந்தன. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் ஹர்திக் விடுவிக்கப்பட்டார். குஜராத் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது ராஜஸ்தானில் தங்கியிருக்கிறார் ஹர்திக்.

Hardik Patel accuses PM Modi of using patidars to 2002 Gujarat riots

அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில்,

  • 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம்.
  • படேல் சமூக இளைஞர்களை குஜராத்தில் வன்முறைகளை நிகழ்த்த பயன்படுத்தினார் மோடி.
  • 2002 குஜராத் வன்முறைகளில் ஈடுபட்டதாக 100க்கும் மேற்பட்ட படேல் இளைஞர்கள் சிறைவாசமும் ஆயுள் தண்டனையும் அனுபவித்து வருகின்றனர்.
  • சிறைகளில் வாடும் படேல் சமூக இளைஞர்களுக்கு பிரதமராக இருக்கும் மோடியால் ஜனாதிபதி மூலம் கருணை காட்ட முடியும்.
  • ஆனால் இந்தியா முன்பாக, உலகத்தின் முன்பாக தம்மை மதச்சார்பற்றவராக காட்டிக் கொள்ளும் மோடி அப்படி எதுவும் செய்யமாட்டார்

என குறிப்பிட்டுள்ளார்.

English summary
Hardik Patel, the convener of Patidar Anamat Andolan Samiti (PAAS), has accused Prime Minister Narendra Modi of using the ‘patidar’ community for orchestrating the Gujarat riots of 2002 when he was the Chief Minister of the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X