For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்க்கிறார் ஹர்திக் படேல்..? எதிர்க்கட்சிகள் வியூகம்

Google Oneindia Tamil News

அகமதாபாத்:பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் ஹர்த்திக் படேலை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை பாஜகவை காட்டிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதி தீவிரமான முன்னெடுத்துச் செல்கின்றன. அதிலும், மோடியை எப்படியும் வீழ்த்திவிட வேண்டும் என்றும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி உள்ளன.

Hardik patel is actively considering to contest loksabha polls from varanasi against modi

அதன் ஒரு பகுதியாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தி அவரை வீழ்த்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந் நிலையில், பிரதமர் மோடியை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் குஜராத்தைச் சேர்ந்த படேல் சமூகத் தலைவர் ஹர்த்திக் படேலை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஹர்த்திக் படேல் வாரணாசியில் தற்போது தீவிர சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடனேயே அவர் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், ஹர்த்திக் படேலை இது பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

ஆனால், அனைத்துக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஏற்கும் பட்சத்தில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஹர்த்திக் படேல் வாரணாசியில் போட்டியிட்டால் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் அவருக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது.

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இருந்தே பெரும்பாலன பிரதமர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதனால் தான் கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

English summary
Patidar quota agitation leader Hardik Patel is actively considering to contest Lok Sabha polls from Varanasi in Uttar Pradesh as an Independent candidate in the 2019 Lok Sabha polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X