For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய தலைமை தேர்தல் ஆணையராக எச்.எஸ் பிரம்மா இன்று பதவியேற்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக எச்.எஸ்.பிரம்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பதவி ஏற்பு விழா இன்று நடைபெற உள்ளது.

ஏற்கனவே தேர்தல் ஆணையர் பதவியிலிருந்த வி.எஸ்.சம்பத் நேற்று ராஜினாமா செய்ததால் மேற்படு எச்.எஸ் பிரம்மா அப்பதவியில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

64 வயதான பிரம்மா அஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு 65 வயதாக இன்னும் 3 மாதங்களே உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி இந்த பதவியில் அமர அதிகபட்சம் 65 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Hari Shankar Brahma is new Chief Election Commissioner

1975 ஆம் ஆண்டு பேட்ச்சில் ஆந்திர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர் பிரம்மா. மேலும், மத்திய அரசின் பவர் செக்ரட்டரியாகவும் இருந்திருக்கிறார்.

வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்கும் பிரம்மா வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நியமிக்கப்படும் 2 ஆவது தலைமை தேர்தல் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பதவிக்காலம் 3 மாதங்கள் மட்டும்தான். இவர், வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Election Commissioner Hari Shankar Brahma was today elevated as the Chief Election Commissioner. He will assume charge tomorrow after present incumbent VS Sampath demitted office today on attaining the age of 65 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X