For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓட்டிப் பார்த்துட்டு தரவா.. வடிவேலு பட பாணியில் ஹார்லி டேவிட்சன் பைக்கை ஆட்டையைப் போட்ட இளைஞர்!

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: உலகின் மிகப் பிரபலமான, விலையுர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்கை ஹைதராபாத்தில் உள்ள ஷோ ரூமிலிருந்து நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வடிவேலு படத்தில் காமெடிக் காட்சி வரும். ஒருவர் பைக்கை விற்க நினைப்பார். அதை ஒருவர் விலைக்குக் கேட்பார். என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் உள்ளே புகும் வடிவேலு, பைக்கை வாங்குபவரிடம் நீங்க ஓட்டிப் பார்த்துட்டே வாங்குங்க என்று கூறி அனுப்பி வைப்பார். ஆனால் டெஸ்ட் டிரைவ் செய்த நபர் வரவே மாட்டார். எஸ்கேப் ஆகி விடுவார். கடைசியில் மொத்த அடியும் வடிவேலு தலையில் இறங்கும். அதே போல ஹைதராபாத்தில் ஒரு பலே திருட்டு நடந்துள்ளது.

Harley Davidson Stolen in Hyderabad on Pretext of 'Test Drive'

ஹைதராபாத்தில் உள்ள ஹார்லி டேவிட்சன் பைக் ஷோ ரூமிற்கு வந்த தாஹிர் அலி என்ற 30 வயது மதிக்கத்தக்க ஒருவர், தன்னை மென்பொறியாளர் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் 6 லட்சம் மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் பைக் ஒன்றை டெஸ்ட் ட்ரைவ் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். கடை ஊழியர்களும் அவரின் பெயர், மொபைல் எண் போன்ற தகவல்களை பெற்றுக்கொண்டு அதற்கு அனுமதி அளித்துள்ளனர்.

தாஹிர் அலி என்ற அந்த நபருடன், துணைக்கு கடை ஊழியர் ஒருவரும் மற்றொரு பைக்கில் சென்றுள்ளார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தாஹிர் அலி, பைக்கை வேறு வழியில் திருப்பிக்கொண்டு வேகமாக பறந்துவிட்டார்.

இந்த சம்பவம் அனைத்தும் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. கேமரா பதிவுகளை கொண்டு அந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

English summary
A man in his thirties allegedly stole a high-end bike worth Rs. 5.7 lakh from a Harley Davidson showroom in Banjara Hills area in Hyderabad today, on the pretext of a "test drive".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X