For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேதத்தில் சிறந்த கோட்பாடு... ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லாததை சொல்லி மாட்டிக்கொண்ட அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லாத கருத்தை சொல்லி மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

இம்பால் : ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த கோட்பாட்டை விட வேதத்தில் சிறந்த கோட்பாடு உள்ளதாக அண்டவெளி ஆய்வாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறி இருப்பதாக ஒரு கருத்தை சொல்லி மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இம்பால் நகரில் மணிப்பூர் பல்கலைக் கழகம் சார்பில் 105-வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி மேடையில் பேசி முடித்த பின்னர் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விழாவில் பேசினார். அப்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இன்று வரை ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படும் E=mc2 என்ற கோட்பாடை விட வேதத்தில் உள்ள கோட்பாடு மேலும் சிறந்தது என்றார்.

சமீபத்தில் நாம் ஒரு சிறந்த விஞ்ஞானி, அண்டவெளி ஆய்வாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கை இழந்துவிட்டோம். அவர் ஐன்ஸ்டீனின் E = mc2 கோட்பாட்டை விட வேதத்தில் உள்ள கோட்பாடு மேலும் சிறந்தது என்று ஆதாரத்துடன் பதிவுசெய்துள்ளதாக ஹர்ஷ் வர்தன் பேசினார்.

மழுப்பிய அமைச்சர்

மழுப்பிய அமைச்சர்

கண், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரான ஹர்ஷ் வர்தன் கூறிய இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஹர்ஷ் வர்தனிடம் செய்தியாளர்கள் வேதத்தில் சிறந்த கோட்பாடு இருப்பதாக ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதற்கான ஆதாரத்தை கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு எந்த ஆதாரத்தையும் கொடுக்காமல் அமைச்சர் மழுப்பலாக மீடியாவில் இருப்பவர்களே கொஞ்சம் உழைத்து கண்டுபிடியுங்கள், உங்களால் முடியாது எனும் போது நான் ஆதாரத்தை தருகிறேன் என்று சமாளித்துள்ளார்.

ஸ்டீபன் அவ்வாறு கூறவில்லை

ஸ்டீபன் அவ்வாறு கூறவில்லை

இதனைத் தொடர்ந்து உண்மையிலேயே ஸ்டீபன் ஹாக்கிங் வேதத்தில் சிறந்த கோட்பாடு இருக்கிறது என்று கூறி இருக்கிறாரா என்று தீவிர தேடுதல் நடத்தியுள்ளன மீடியாக்கள். ஆனால் அவருடைய முகநூல் பக்கம், ஆய்வுகள் என எதிலுமே அவ்வாறு குறிப்பிடப்படவில்லை.

தேடல் எந்திரம் என்ன சொல்கிறது?

தேடல் எந்திரம் என்ன சொல்கிறது?

ஸ்டீபன் ஹாக்கிங்+வேதாஸ் என்று தேடல் எந்திரத்தில் போட்டுப் பார்த்தால், அதில் முதல் லிங்க் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயிண்டிபிக் ரிசர்ச் ஆன் வேதாஸ் என்ற இணையப்பக்கம் முதலில் வருகிறது. அதில் இந்த அமைப்பின் செயலர் சிவராம் பாபு என்பவர் 2011ல் செய்யப்பட்ட பதிவு ஒன்று உள்ளது, அவர் ஐன்ஸ்டின் கோட்பாட்டை விட வேதத்தில் சிறந்த கோட்பாடு இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரமற்ற கூற்று

ஆதாரமற்ற கூற்று

மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஜோதிடத்தை மறுத்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாக இந்திய அறிவியல் மாநாட்டில் கூறி இருக்கும் விஷயம் ஆதாரமற்ற கூற்றாகவே பார்க்கப்படுகிறது.

English summary
Union Minister for Science & Technology Dr. Harsh Vardhan's fake claim of stephen hawking that he says that our Vedas might have a theory which is superior to Einstein’s theory of E=mc^
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X