For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹார்வார்ட் பல்கலை. லண்டனில் இருக்கிறது.. சொல்வது அமித்ஷாவை கோர்த்துவிட்ட திரிபுரா முதல்வர்தான்!

Google Oneindia Tamil News

அகர்தலா: ஹார்வார்ட் பல்கலைக் கழகம் லண்டனில் இருக்கிறது என பேசி புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ்.

இந்தியாவில் மட்டுமல்ல இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தம்மிடம் கூறியதாக தெரிவித்திருந்தார் பிப்லப் தேவ். அவரது இந்த கருத்து சர்வதேச பிரச்சனையானது.

Harvard University is in London, says Tripura CM Biplab Deb

இலங்கை, நேபாள அரசுகள் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இலங்கை பாரதிய ஜனதா கட்சி தொடங்கப் போகிறேன் என்று அந்நாட்டு சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் அறிவித்தும் இருக்கிறார்.

இந்த நிலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சாட்சாத் அதே திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ். திரிபுரா மத்திய பல்கலைக் கழகத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பிப்லப் தேவ் பங்கேற்றார்.

அங்கு மாணவர்களிடையே பேசிய பிப்லப் தேவ், பல்கலைக் கழகம் அமைந்திருப்பதாலேயே ஒரு நகரம் அல்லது ஒரு இடம் பெருமைக்குரியதாகிறது. இங்கிலாந்தின் லண்டனை நாம் நினைத்தாலே நமக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகமும் ஹார்வார்ட் பல்கலைக் கழகமும்தான் நினைவுக்கு வருகின்றன என கூறினார்.

ஹார்வார்ட் பல்கலைக் கழகம் அமெரிக்காவில் இருக்கிறது. ஆனால் பல்கலைக் கழக மாணவர்களிடம் பேசிய திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், லண்டனில் ஹார்வார்ட் பல்கலைக் கழகம் இருக்கிறது என பேசியிருப்பது தற்போது புதிய சர்ச்சையாகி உள்ளது.

English summary
Tripura CM Biplab Deb said that when we think about England or London, pictures of the Cambridge University and Harvard University come to our mind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X