For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு.. ஹரியானா சட்டசபையில் சட்டம் நிறைவேற்றம்

ஹரியானாவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஹரியானாவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறார்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்கும் வகையில் அண்மையில் ராஜஸ்தான் அரசு 12 வயதுக்குட்பட்ட சிறார்களை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியது.

Haryana assembly passes bill on Death for rapist

ஏற்கனவே இதுபோன்ற சட்டம் மத்திய பிரதேச மாநில சட்டசபையில் கடந்த டிசம்பர் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஹரியானா சட்டசபையிலும் இதுபோன்ற சட்டத்தை அம்மாநில அரசு நிறைவேற்றியுள்ளது.

அதாவது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்ளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் ஹரியானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகும்.

English summary
Haryana assembly passes bill on Death for rapist. Haryana assembly today passed bill that who rapes below 12 years old chilldren will be given for death sentence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X