For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடங்கி 1 வருடம் கூட ஆகவில்லை.. 319 நாளில் கிங் மேக்கராகும் ஜேஜேபி.. ஹரியானா அரசியலில் பரபரப்பு!

ஹரியானா அரசியலில் கிங் மேக்கராக ஜன்நாயக் ஜனதா பார்ட்டி உருவெடுத்து உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    JJP emerging as king maker | கிங் மேக்கராகும் ஜேஜேபி.. ஹரியானா அரசியலில் பரபரப்பு!

    சண்டிகர்: ஹரியானா அரசியலில் கிங் மேக்கராக ஜன்நாயக் ஜனதா பார்ட்டி உருவெடுத்து உள்ளது.

    மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. ஹரியானா சட்டசபை தேர்தலில் 90 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 36 தொகுதிகளில் முன்னிலை.

    ஹரியானாவில் பெரும்பான்மை பெற 46 இடங்கள் தேவை. அங்கு நெக் டு நெக் போட்டி நிலவி வருகிறது.

     ஆதித்யா தாக்கரேவை முதல்வராக பார்க்க ஆசை.. சிவசேனாவின் திடீர் கோரிக்கை ஆதித்யா தாக்கரேவை முதல்வராக பார்க்க ஆசை.. சிவசேனாவின் திடீர் கோரிக்கை

    முன்னிலை

    முன்னிலை

    தற்போது 12 இடங்களில் ஜேஜேபி எனப்படும் ஜன்நாயக் ஜனதா பார்ட்டி முன்னிலை வகிக்கிறது. இந்த கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அவர்களே அங்கு ஆட்சி அமைக்க முடியும் என்று நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹரியானாவில் கிங் மேக்கர் கட்சியாக ஜன்நாயக் ஜனதா பார்ட்டி உருவெடுத்துள்ளது.

    ஜன்நாயக் ஜனதா பார்ட்டி எப்படி

    ஜன்நாயக் ஜனதா பார்ட்டி எப்படி

    ஜன்நாயக் ஜனதா பார்ட்டி சரியாக 319 நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. ஹரியானா அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் சவுதாலா குடும்பத்தை சேர்ந்த துஷ்யந்த் சவுதாலா தொடங்கிய கட்சியாகும் இது. இந்தியன் நேஷனல் லோக் தல் கட்சியில் இருந்து பிரிந்து இந்த ஜன்நாயக் ஜனதா பார்ட்டி தொடங்கப்பட்டது.

    என்ன வரலாறு

    என்ன வரலாறு

    ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்தியன் நேஷனல் லோக் தல் கட்சியில் இருந்து துஷ்யந்த் கடந்த வருடம் நீக்கப்பட்டார். துஷ்யந்த் சவுதாலா ஓம் பிரகாஷின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. துஷ்யந்த் சவுதாலாவை அவரின் பெரியப்பா அபய் சவுதாலாதான் கட்சியில் இருந்து நீக்கினார்.

    வெளியே வந்தார்

    வெளியே வந்தார்

    இதனால் குடும்பத்தோடு வெளியே வந்த துஷ்யந்த் சவுதாலா, ஜன்நாயக் ஜனதா பார்ட்டி கட்சியை தொடங்கினார். ஜாட் இன மக்களின் வாக்குகளை நம்பி இவர் இந்த கட்சியை ஆரம்பித்தார் . கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில் இவர் வரிசையாக பல பேரணிகளை நடத்தினார்.

    ஜாதி ரீதியான ஓட்டு

    ஜாதி ரீதியான ஓட்டு

    தன்னுடைய ஜாதி ரீதியான வாக்குகளை பேரணிகள் மூலம் ஜன்நாயக் ஜனதா பார்ட்டி ஒருங்கிணைத்தது. தற்போது 10+ இடங்களை தேர்தலில் வெல்லும் நிலைக்கு ஜன்நாயக் ஜனதா பார்ட்டி சென்றுள்ளது. இதனால் ஹரியானாவில் கிங் மேக்கராக ஜன்நாயக் ஜனதா பார்ட்டி உருவாகி உள்ளது.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    அதேபோல் ஜன்நாயக் ஜனதா பார்ட்டி கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க கூட காங்கிரஸ் தயாராக இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஆம் ஹரியானாவில் பாஜகவை ஆட்சியை பிடிக்க விடாமல் செய்ய ஜன்நாயக் ஜனதா பார்ட்டியுடன் இணைய காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாம். துஷ்யந்த் சவுதாலாவிற்கு முதல்வர் பதவியை அளிக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக கூறுகிறார்கள்.

    English summary
    Haryana election results: JJP emerging as the kingmaker of the Haryana state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X