For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

300 தீவிரவாதிகளை கொன்னோம்னு மோடி சொன்னாரா? இல்லையே... சர்ச்சையான அமைச்சர் வீடியோ

Google Oneindia Tamil News

சிலிகுரி: பாலகோட் தாக்குதலில் இத்தனை பேர் இறந்தார்கள் என்று எப்போதாவது பிரதமர் மோடி சொல்லியிருக்கிறாரா என்று மத்திய அமைச்சர் அலுவாலியா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானில் புகுந்த இந்திய ராணுவ விமானங்கள் பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் முகாமை அழித்தது. தாக்குதல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு போதும் மாற்று கருத்து கிடையாது என்றும் அக்கட்சியினர் கூறினர். அதே நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி இந்த தாக்குதல் குறித்து சந்தேகம் எழுப்பினார்.

பாக். ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் அனுப்பிய கடைசி ரேடியோ மெசேஜ்?... வெளிவராத புதிய தகவல் பாக். ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் அனுப்பிய கடைசி ரேடியோ மெசேஜ்?... வெளிவராத புதிய தகவல்

வீடியோ வெளியீடு

வீடியோ வெளியீடு

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டதற்கான ஆதாரத்தை எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சிபிஎம் கட்சி கொல்கத்தாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா பாலகோட் தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என்ற தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

மனித இழப்புகள்

மனித இழப்புகள்

அவர் பேசியதாவது:எதிரிகளின் பகுதிகளை ஊடுருவித் தாக்கமுடியும் என்பதுதான் நோக்கமே தவிர தாக்குதலில் மனித இழப்புகளை ஏற்படுத்துவது அல்ல. இந்திய ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் மோடி கூறியதாக சில தகவல்களை வெளியிட்டன.

பலியானோரின் எண்ணிக்கை

பலியானோரின் எண்ணிக்கை

பாலகோட் தாக்குதலுக்கு பிறகு நடந்த ஒரு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஆனால் அந்த கூட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை பற்றி அவர் சொல்லவில்லை.

யார் சொன்னாங்க?

யார் சொன்னாங்க?

பிரதமர் மோடியோ,அரசாங்க செய்தித் தொடர்பாளரோ அல்லது எங்களுடைய கட்சித் தலைவர் அமித் ஷாவோ பாலகோட் தாக்குதலில் இத்தனை பேர் இறந்தார்கள் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா? அந்த தாக்குதலின் நோக்கம், தேவைப்பட்டால் பாகிஸ்தானின் கொல்லைப் புறத்திற்கே சென்று தாக்கி அழிக்க முடியும் என்பது தான்.

நோக்கமல்ல

நோக்கமல்ல

அந்த செய்தியை பாகிஸ்தானுக்கு சொல்வற்குத்தானே தவிர, எந்த ஒரு உயிரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்கானதல்ல. அப்படி யாரையும் கொல்லவும் இல்லை என்று பேசியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள இடது சாரிகள், பாகிஸ்தான் தீவிரவாத முகாம் தகர்த்ததாக தெரிவித்திலிருந்து அரசு பின்வாங்குவதாக கூறியுள்ளது.

English summary
Has Modi himself said 300 terrorists were killed? Union minister SS Ahluwalia on airstrike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X