For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க 3 பொண்டாட்டி கட்டிக்கொள்ளுங்கள்: மாஜிஸ்திரேட்

By Siva
Google Oneindia Tamil News

போபால்: தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க ஆண்கள் ஆளுக்கு 3 மனைவிகள் வைத்துக் கொள்ளுமாறு மத்திய பிரதேச மாநில சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் பண்டல்கன்ட் பகுதியில் இருக்கும் திகம்கார் மாவட்டத்தில் உள்ள லிதோரா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஜதாரா சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பி.கே. பாண்டே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

மனைவிகள்

மனைவிகள்

மத்திய பிரதேசத்தில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. அதை சமாளிக்க ஆண்கள் 3 மனைவிகளை வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனைவி குழந்தைகளை பெறவும், மற்ற இருவர் தண்ணீர் எடுக்கவும் செய்யலாம்.

தண்ணீர்

தண்ணீர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் ஜதாரா பிளாக்கில் உள்ள பைர்வார் கிராமம் வழியாக சென்றேன். அப்போது இரவு 2 மணிக்கு கூட பெண்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதை காண முடிந்தது.

சமாளிக்க

சமாளிக்க

தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. தண்ணீர் குடிக்க வேண்டும் எனில் பணம் உள்ளவர்கள் 3 மனைவிகளை வைத்துக் கொள்ளலாம். பணம் இல்லாதவர்களால் 3 மனைவிகளை சமாளிக்க முடியாது.

பெண்கள்

பெண்கள்

பண்டல்கன்ட் பகுதியில் பெண்களின் எண்ணிகை மிகவும் குறைவு. அது எனக்கும் தெரியும். நம் அண்டை மாவட்டமான உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியால் தான் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவாக உள்ளது என்றார் பாண்டே.

English summary
A sub-divisional magistrate in Tikamgarh district of Bundelkhand region named BK Pandey told that men should have three wives to overcome water crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X