For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 மனைவிகளுடன் குடும்பம் நடத்த பைக் திருடிய பெங்களூர் கொள்ளையன்! பரபரப்பு வாக்குமூலம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தனது இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்த பைக்குகளை திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூருவில் கூலி வேலை பார்த்து வரும் முரளி ராமராவ் (32). பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார். கடந்த ஜுலை 5-ந் தேதி பெங்களூரில் பைக் ஒன்றை திருட முயன்ற அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், முரளி ராமராவ் கூறியதாவது: எனக்கு இரு மனைவிகள் உள்ளனர். எனது இரண்டு குடும்பத்தையும் காப்பாற்ற, கூலித்தொழில் மூலம் வரும் வருமானம் போதவில்லை. எனவே தான் பைக்குகளை திருடி விற்றேன் என்று கூறியுள்ளாராம்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: பைக் திருடுவதை முரளி ராமாராவ் வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் இதுவரை 25-க்கும் மேற்பட்ட பைக்குகளை பல்வேறு பகுதிகளில் திருடி விற்றுள்ளார். திருடுவதை 2-வது தொழிலாக வைத்திருந்த அவரிடம் இருந்து, ரூ.15 லட்சம் மதிப்புள்ள 25 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முரளி கொண்டு வரும் பைக் குறித்து அவரது மனைவி ஏதேனும் கேட்டால், பைக் தனது நண்பர்களுடையது என அவர்தெரிவித்து வந்துள்ளார். போலியான சாவிகளைக் கொண்டு பைக்குகளை திருடி வந்த அவர், தன் மீதான குற்றறத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கைதான முரளி ராமராவ் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

English summary
A coolie by profession and breadwinner for his two families, 32-year-old Murali Ramrao had taken to stealing bikes to make ends meet before he was caught trying to steal a Honda Dio from a hotel opposite Mantri Mall on July 5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X