For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதியில் புதையலை எடுக்கவே பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு- தலைமை அர்ச்சகர் பரபர புகார்

திருப்பதியில் புதையலை எடுக்கவே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தலைமை அர்ச்சகர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    19-ஆம் தேதி திருப்பதிக்கு வாங்க...பக்தர்களுக்கு ரமண தீட்சதலு பரபரப்பு அழைப்பு- வீடியோ

    திருப்பதி: திருப்பதியில் புதையலை எடுப்பதற்காகவே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தலைமை அர்ச்சகர் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.

    திருப்பதி கோயிலில் அதிகாரிகள் சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு அங்குள்ள புதையலை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு புகார் தெரிவித்தார்.

    இதனிடையே திருப்பதில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 17-ஆம் தேதி காலை 6 மணி வரை ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    பக்தர்கள் அனுமதி

    பக்தர்கள் அனுமதி

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு கூறுகையில் திருப்பதி கோயில் உள்ளே பக்தர்கள் அனுமதிக்க மறுப்பது வேதனை அளிக்கிறது. மஹா சம்ப்ரோக்ஷணம் நடக்கும் போது இதற்கு முன்பும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    நகைகள் மாயம்

    நகைகள் மாயம்

    திருப்பதி மலையேற விடாமல் தடுப்பது, கேமராவை மூடுவது விபரீதத்தை ஏற்படுத்தும். திருப்பதி கோயில் மடப்பள்ளியில் சில விஷயங்கள் நடந்தன. திருப்பதி கோயிலில் உள்ள விலை உயர்ந்த நகைகள் காணாமல் போய் உள்ளன.

    சிபிஐ விசாரணை

    சிபிஐ விசாரணை

    உச்சநீதிமன்றத்தில் 19-ஆம் தேதி வழக்கு வரும்போது சிபிஐ விசாரிக்க கோருவோம். திருப்பதியில் புதையலை எடுக்கவே பக்தர்களை தடுக்கின்றனர்.
    ரிமோட் சென்சிஸிங் மூலம் கோயிலில் உள்ள புதையல் குறித்து தெரியவந்துள்ளது.

    அர்ச்சகர் அழைப்பு

    அர்ச்சகர் அழைப்பு

    19-ஆம் தேதி பக்தர்கள் அனைவரும் திருப்பதி வர வேண்டும். பக்தர்களை கோயிலுக்கு வராமல் தடுப்பது இந்துக்களுக்கு எதிரானது. இந்து சம்பிரதாயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் திருப்பதி தேவஸ்தானத்தில் இடம் தர வேண்டும். திருப்பதியில் ஜிபிஆர் முறையில் புதையல் குறித்து சென்னை ஐஐடி ஆராய்ந்துள்ளது என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Head priest accuses TTD for not allowing devotees to the temple and he says to loot the treasure they are not allowing the devotees.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X