For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இத்தாலில கூட தேர்தல் நடக்குது.. ராகுல்காந்தி அதுக்குத்தான் போய் இருக்காரோ.. அமித் ஷா கிண்டல்

வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கும் சமயத்தில் ராகுல் காந்தி இத்தாலி சென்று இருப்பது நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கும் சமயத்தில் ராகுல் காந்தி இத்தாலி சென்று இருப்பது நகைப்புக்கு உள்ளாகியுள்ளது. திரிபுராவில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து இருக்கிறது.

திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. 25 ஆண்டுகளாக திரிபுராவில் இருந்த மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

அங்கு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இது அந்த கட்சிக்கு பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.

ராகுல்

ராகுல்

இந்த நிலையில் இந்த தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி நாட்டிலேயே இல்லை. அவர் யாருக்கும் பேட்டியும் கொடுக்கவில்லை. அவர் இத்தாலியில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

அமித் கிண்டல்

அமித் கிண்டல்

இது குறித்து அமித்ஷாஞ் கிண்டல் செய்து இருக்கிறார். அதில் ''இத்தாலியில் கூட இப்போது தேர்தல் நடக்கிறது. வாட்ஸ் ஆப்பில் பார்த்தேன் இத்தாலியில் தேர்தல் நடப்பதாக'' என்று கேலியாக பேசியுள்ளார். அப்போது அங்கு இருந்த மக்கள் சத்தம் போட்டு சிரித்தார்கள்.

கிரிராஜ் சிங் கிண்டல்

கிரிராஜ் சிங் கிண்டல்

அதேபோல் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ''ராகுல்காந்திக்கு தேர்தல் வித்தைகள், தந்திரங்கள் நன்றாக தெரிந்துள்ளது. அவருக்கு எப்போது நாட்டைவிட்டு ஓட வேண்டும் என்று தெரிந்துள்ளது'' என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன பதில்

என்ன பதில்

இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகமது பட்டேல் பதில் அளித்துள்ளார். அதில் ''இத்தாலிக்கு சொந்த பாட்டியை பார்க்க செல்வது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? இதை வைத்து கிண்டல் செய்வது அநாகரீகம்'' என்றுள்ளார்.

English summary
Amidst the hectic political activity in Northeast, Congress president, Rahul Gandhi was missing in action. He is away at Italy to spend time with his grandmother. Amit Shah Amit Shah, the BJP chief took a dig at Rahul's absence. While addressing a presser, he said, "Italy mein chunaav bhi to hain (There are elections in Italy too). As the audience burst into laughter, he said, I got a message on WhatsApp that elections are being held in Italy. I don't know, he also added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X