For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனலாய் தகிக்கும் வட இந்தியா - நெருப்பு காற்று... கானல் நீரோடும் சாலைகள்

வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் நெருப்பை கொட்டுவது போல அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கஜூராகோ : வட இந்தியாவில் வெப்ப அலை வீசுகிறது. மத்தியப்பிரதேசத்தின் சுற்றுலாத்தளமான கஜுராஹோவில் 115 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திரப்பூரில் 115.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பாண்ட், ராஜஸ்தானின் பிகானிரிடம் 115 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

Heat wave hit in North India

நாடு முழுவதும் அக்னி வெயில் ருத்ர தாண்டவமாடி வருகிறது. வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.

வட இந்தியாவில் மார்ச் மாதத்திலேயே குஜராத், ஆந்திரா, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் வெயில் தகிக்கத் தொடங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் தற்போது இயல்பு அளவைக் காட்டிலும் கூடுதலாக வெயில் காணப்படுகிறது.

தற்போது வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருகிறது. வெப்ப அலைக்கு பலர் உயிரிழந்துள்ளனர். வட இந்தியாவில் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொதித்த வெப்பம்

கோடைகாலமான மே, ஜூன் மாதங்களில் வட இந்தியாவில் பொதுவாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். இது 104 டிகிரி பாரன்ஹீட் ஆகும், 50 டிகிரி செல்சியஸைத் தொடுவது அபூர்வம். கடந்த ஆண்டு மே 21ஆம் தேதியன்று ராஜஸ்தான் மாநில பலோடியில் 51 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருப்பது, இதுவரை இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையிலேயே மிக அதிகம். இது 123 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.

கொதிக்கும் வெப்பம்

வட இந்தியாவில் வெப்ப அலை நடப்பாண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் சுற்றுலாத்தளமான கஜுராஹோவில் 115 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் சந்திரப்பூரில் 115.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பாண்ட், ராஜஸ்தானின் பிகானிரிடம் 115 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

சூறைக்காற்று மழை

வெப்பம் தகித்தாலும் தலைநகர் டெல்லி தொடங்கி பல மாநிலங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வெப்பம் தணிந்து குளுமை பரவும் என்றும் ஸ்கைமெட் தனியார் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

English summary
Heat wave hit in North India, Skymet Weather predicts that one or two rainy spells along with thunderstorms and thundershowers are likely to make their way towards the national capital and adjoining areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X