For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் ஆபத்து நிலையில் காற்று மாசு... மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை

டெல்லியில் காற்று மாசு ஆபத்து நிலையில் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: காற்று மாசு ஆபத்து நிலையில் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி புழுதி புயல் வீசி வருகிறது. ஏற்கனவே காற்று மாசால் திணறி வரும் டெல்லிக்கு இந்த புழுதி புயல் பெரும் சவாலாக உள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை வீசிய புழுதி புயலால் மாலை 5 மணிக்கே இரவு போல் இருட்டியது. இந்த புழுதி புயலால் டெல்லியில் காற்று மாசின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.

கட்டுமான பணிகள் நிறுத்தம்

கட்டுமான பணிகள் நிறுத்தம்

புழுதி புயலால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நேற்று அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து டெல்லியில் கட்டுமானப் பணிகளை வரும் 17ஆம் தேதி வரை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை

மக்களுக்கு எச்சரிக்கை

ராஜஸ்தானில் இருந்து வீசும் புழுதி புயல் காற்றால் டெல்லி முழுவதும் காற்று மாசு அடைந்துள்ளது. எனவே டெல்லியில் காற்று மாசு அபாயகரமாக உள்ளதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புழுதி புயல் நீடிக்கும்

புழுதி புயல் நீடிக்கும்

மேலும் 3 அல்லது 4 நாட்களுக்கு புழுதிப்புயல் வீசும் என்பதால், வெளியே திறந்த வெளி பகுதியில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது.

டெல்லி மக்கள் கலக்கம்

டெல்லி மக்கள் கலக்கம்

மக்கள் வெளியே வரும்போது சுவாச முகமூடிகளை அணிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடரும் புழுதி புயல் மற்றும் காற்று மாசால் டெல்லி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

English summary
Heavy air pollution in Delhi. Warning for delhi people to do not come out of the house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X