For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நயாகரா நீர் வீழ்ச்சியானது மும்பை முலுந்த் ரயில் நிலையம் #MumbaiRains

மும்பையில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள முலுந்த் ரயில் நிலையம் நயாகரா நீர் வீழ்ச்சியாக காட்சியளிக்கிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் கடந்த 2 தினங்கள் கனமழை பெய்து வருவதால் ரயில் நிலையங்களின் நடைமேடையிலிருந்து மழைநீர் அருவி போல் கொட்டுகிறது.

அதிகப்பட்சமாக மும்பையில் கடந்த 2 தினங்களாக மழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.

Heavy downpour in Mumbai turned Mulund Station into Niagara Falls

இரண்டு நாள்களில் பெருநகரமான மும்பையையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. சாலைகளில் வெள்ள நீரால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. காற்று பலமாக வீசிவருவதால் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

ரயில் நிலையங்களில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு வழியில்லாமல் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் முலுந்த் ரயில் நிலையத்தில் நடைமேடையிலிருந்து வெள்ள நீர், நீர் வீழ்ச்சி போல் கொட்டி வருகிறது.

இது பார்ப்பதற்கு நயாகரா வீழ்ச்சியை நினைவுப்படுத்துகிறது என்று டுவிட்டரில் ஒருவர் வீடியோவுடன் கமென்ட்டையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

English summary
Heavy downpour in Mumbai turned Mulund Station into Niagara Falls. Netisan expresses this comment in twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X