For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நகரி: புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை இன்று என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் கடந்த 4 ஆம்தேதி முடிவடைந்தது. எனினும் புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமை

இந்நிலையில் இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் நேற்று முதலே குவியத் தொடங்கினர். பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தர்ம தரிசனத்துக்கு 28 மணி நேரம் ஆனது.

20 மணி நேரம் காத்திருப்பு

20 மணி நேரம் காத்திருப்பு

கால்நடை பக்தர்கள், 20 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு கட்டண பக்தர்கள் 5 மணி நேரமும் தரிசனத்துக்காகக் காத்து நின்றனர்.

தரிசன டோக்கன் நிறுத்தம்

தரிசன டோக்கன் நிறுத்தம்

பாத யாத்திரை பக்தர்களின் வசதிக்காக , திவ்ய தரிசன டோக்கன் வழங்குவது இன்றும் நாளையும் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப் படுவதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

திவ்ய தரிசனம்

திவ்ய தரிசனம்

தர்ம தரிசனத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Today Puratasi last Saturday heavy crowd in Tirupathi temple. Tamilnadu people deidcate this month for Lord Sri Venkateswara. Every Saturdays, Devotees will do fastings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X