குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜன் சிலை.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சோழ வம்சத்தை சேர்ந்த புகழ்பெற்ற மன்னரான ராஜராஜ சோழன், இந்தியா முழுக்க பல பகுதிகளை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. குமரி தொடங்கி இமயம் வரை பல பகுதிகளில் ராஜராஜசோழன் போர் தொடுத்து சென்றுள்ளார். அவரது மகன் ராஜேந்திர சோழனும் கடல்கடந்து போர் தொடுத்து சென்றுள்ளார்.

இவர்கள் பல நாடுகளை பிடித்த போது, அவர்களுக்கு, அந்தந்த பகுதிகளில் சிலைகள் நிறுவப்பட்டது. இன்னும் பல பகுதிகளில் இந்த சிலைகள் அப்படியே இருக்கிறது. தமிழக தொல்லியல் துறை பல சிலைகளை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வருகிறது.
இந்த சிலைகளின் மதிப்பு பல கோடிகளை தாண்டும். தற்போது குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலையை தேடி குஜராத் சென்ற தமிழக போலீஸ், சிலையை மீட்டுள்ளது. ஐஜி பொன்மானிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ராஜராஜ சோழன் சிலையுடன் உலகமகாதேவி சிலையும் மீட்டது தமிழக போலீஸ். இந்த சிலைகள் இன்று தமிழகம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் கொண்டு வரப்பட்ட சிலைகள் தற்போது தஞ்சை பெரிய கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ 150 கோடி என ஐஜி பொன்மானிக்கவேல் தகவல் தெரிவித்துள்ளார். 1000 ஆண்டுகள் பழமையானது என்பதால் இன்னும் அதிக விலை கூட இருக்க வாய்ப்புள்ளது.
தற்போது இந்த சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜராஜன் உலகமாதேவி சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications