For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

BREAKING NEWS: சென்னையில் பின்னி பெடலெடுத்த மழை

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த 3 தினங்களாக மழை பின்னி பெடலெடுத்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவோர் அவதிப்பட்டனர்.

Newest First Oldest First
8:11 PM, 11 Jul

சென்னையில் இன்னும் விடாமல் பெய்கிறது மழை

தொடர் மழையால் போக்குவரத்து பாதிப்பு

பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதாக தகவல்

அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கடும் அவதி

நல்ல மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி

பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது

6:51 PM, 11 Jul

சென்னையில் பலத்த மழையால் போக்குவரத்து நெரிசல்

ரயில் நிலையங்களை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் பரிதவிப்பு

போக்குவரத்து பாதிப்பால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் அவதி

காசிமேடு, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

6:13 PM, 11 Jul

குரோம்பேட்டை சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை
6:06 PM, 11 Jul

சென்னையில் பரவலாக மழை

சென்னை முகப்பேர், வளசரவாக்கம், போரூர், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் மழை

4:49 PM, 11 Jul

கபினியில் இருந்து 50,000 கன அடி நீர் வெளியேற்றம்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கன மழையால் அதிக நீர் வெளியேற்றம்

4:48 PM, 11 Jul

ஸ்ரீரங்கம் ஜீயர் காலமானார்

90 வயதான ஸ்ரீரெங்கநாராயண சுவாமிகள் காலமானார்

4:48 PM, 11 Jul

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

துப்பாக்கி சூடு நடந்தபோது மாவட்ட கலெக்டர் எங்கே சென்றிருந்தார்? -ஹைகோர்ட்

எந்தெந்த வகை துப்பாக்கிகள் கலவரத்தின்போது பயன்படுத்தப்பட்டன?

அமைதியாக நடந்த 99 நாள் போராட்ட வீடியோவையும் தாக்கல் செய்ய உத்தரவு

4:25 PM, 11 Jul

கும்பகோணம் வந்தது பழனி முருகன் சிலை

2004ம் ஆண்டு சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு

பழனியில் இருந்து கும்பகோணத்திற்கு சிலை இன்று காலை புறப்பட்டது

4:13 PM, 11 Jul

தினமும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜாவால் கீழ் நீதிமன்றத்தை அணுக முடியாதது ஏன்?

2 வது முறையாக முன்ஜாமீன் கோரிய பாரதி ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

4:02 PM, 11 Jul

தாஜ்மகால் தொடர்பான வழக்கில் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் பாய்ச்சல்

தாஜ்மகாலை பராமரிக்க முடியாவிட்டால் இடித்து தள்ளுங்கள்-உச்சநீதிமன்றம்

3:44 PM, 11 Jul

பாலியல் சர்ச்சையில் சிக்கினார் இன்னொரு பாதிரியார்

கேரளாவில் மீண்டும் பரபரப்பு

பினு ஜார்ஜ் என்ற பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்

30 வயது பெண் கொடுத்துள்ள புகார் மீது விசாரணை

குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி பலாத்காரம் செய்ததாக புகார் 2014ல் சம்பவம் நடந்ததாக பெண் தகவல்

1:23 PM, 11 Jul

நீட்.. உச்சநீதிமன்றத்தில் எம்.பி. டி.கே.ரங்கராஜன் சார்பில் கேவியட் மனு

சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பில் கேவியட் மனு

நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால் தம்மையும் விசாரிக்க கோரிக்கை

தமிழில் தேர்வு எழுதிய நீட் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க ஹைகோர்ட் உத்தரவிட்டது

12:51 PM, 11 Jul

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும் - சென்னை ஹைகோர்ட்

தமிழகத்தில் இப்போதும் சிலை கடத்தல் நடக்கிறது - சென்னை ஹைகோர்ட்

சிலை கடத்தல் தடுப்பிரிவு நடவடிக்கை எடுக்கும்போதும் கூட கடத்தல் நடக்கிறது

சிலை கடத்தலை தடுக்கவில்லை என்றால் சிபிஐக்கு வழக்கை மாற்ற நேரிடும்

சிலை கடத்தலுக்கு எதிரான வழக்கில் சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை

12:32 PM, 11 Jul

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் முக்கியமான விஷயங்களை பேசினேன்- பா. ரஞ்சித்

ராகுலை சந்தித்த பின் பா. ரஞ்சித் டிவிட்

ஜாதி, மத ரீதியான அச்சுறுத்தல்கள் குறித்து பேசினேன்

ஒரு தேசிய தலைவர் மாற்று கருத்துள்ளவர்களுடன் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது - பா. ரஞ்சித்

11:57 AM, 11 Jul

கிறிஸ்டி நிறுவனம் 1350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு

வருமான வரித்துறை ஆய்வில் வரி ஏய்ப்பு அம்பலம்

கிறிஸ்டி நிறுவனத்தில் லாரி நிறைய கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்

100 போலி நிறுவனங்கள் நடத்தி வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தகவல்

11:25 AM, 11 Jul

நிர்மலா தேவி-ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி நடுவே தொடர்பு-சிபிசிஐடி

இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட ஆதாரங்கள் சமர்ப்பிப்பு

மதுரை ஹைகோர்ட் கிளையில் ஆதாரங்களை தாக்கல் செய்தது சிபிசிஐடி

கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி எதிர்ப்பு

11:13 AM, 11 Jul

பேரறிவாளனை விடுவிக்க ஆட்சேபம் இல்லையென்று ராகுல் காந்தி தெரிவித்தார் - பா.ரஞ்சித்

பேரறிவாளனை விடுவிக்க உதவி கேட்டு ராகுலிடம் பா.ரஞ்சித் கோரிக்கை

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உதவுவதாக ராகுல் கூறினார் - பா.ரஞ்சித்

ராகுல் காந்தி பா.ரஞ்சித் சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது

10:30 AM, 11 Jul

வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

வங்கக்கடலில் நீடிக்கும் குறைந் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறும் - வானிலை மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 13ம் தேதி வலுப்பெறும் என தகவல்

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

10:25 AM, 11 Jul

பழனி முருகன் கோயில் சிலை கும்பகோணம் கொண்டு செல்லப்படுகிறது

2004ம் ஆண்டு சிலை செய்ததில் முறைகேடு என வழக்கு

வழக்கு விசாரணைக்காக கும்பகோணம் நீதிமன்றத்தில் முருகன் சிலை ஒப்படைப்பு

2 போலீஸ்காரர்கள் பாதுகாப்புடன் முருகன் சிலை கும்பகோணம் கொண்டு செல்லப்படுகிறது

10:13 AM, 11 Jul

5 நாட்களாக தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை

தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் லி. 80 ரூபாயை தாண்டியது

9:44 AM, 11 Jul

11 வருடங்களுக்கு பிறகு கே.ஆர்.எஸ். அணை சாதனை நீர்பிடிப்பு

கே.ஆர்.எஸ் அணையின் நீர் மட்டம் 112.70 அடியாக உயர்ந்துள்ளது

11 வருடங்களுக்கு பிறகு முதல் தடவையாக 112 அடியை தாண்டியது

கே.ஆர்.எஸ் அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி

8:31 AM, 11 Jul

சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினரிடம் பழனி முருகன் சிலை ஒப்படைப்பு

முருகன் கோயிலின் உற்சவர் சிலை காவல்துறையிடம் ஒப்படைப்பு

2004ல் முருகன் சிலை செய்ததில் முறைகேடு தொடர்பாக ஒப்படைப்பு

8:30 AM, 11 Jul

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பயங்கர குண்டு வெடிப்பு

குண்டு வெடிப்பால் 14 பேர் பலி, 30 பேர் படுகாயம்

அவாமி தேசிய கட்சியின் தலைவர் பிலார் சம்பவ இடத்திலேயே பலி

8:30 AM, 11 Jul

கபினி அணையிலிருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

காவிரியில் வினாடிக்கு 45,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது

விரைவில் மேட்டூர் அணை 80 அடியை எட்டும் என கூறப்படுகிறது

கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

English summary
Kabini dam ouflow increased to 50,000 cusecs to River Cauvery as inflow rises since noon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X