For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டர் ஊழல்: இந்திய விமானப்படை முன்னாள் தளபதி மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பானாஜி: அன்னிய செலவாணி மோசடி வழக்கில் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகிக்கு எதிராக அமலாக்க துறை வழக்கு வழக்குப்பதிவு செய்துள்ளது.

Helicopter deal: ED registers money laundering case against ex-IAF chief SP Tyagi

வி.வி.ஐ.பிகளுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழல் வழக்கில் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமலாக்க பிரிவு இன்று மேலும் ஒரு வழக்கை இவர் மீது பதிவு செய்துள்ளது. அன்னிய செலவாணி மோசடி செய்ததாக இந்த வழக்கை அமலாக்க பிரிவு பதிந்துள்ளது. இதேபோன்ற வழக்கை குற்றம்சாட்டப்பட்ட பிறர் மீதும் அமலாக்கப்பிரிவு பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.3600 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர் ஊழல் குறித்து சிபிஐ இன்று, கோவா மாநில ஆளுநர் பி.வி.வன்சோவிடம் விசாரணை நடத்தும் நிலையில், தியாகி மீது அமலாக்க பிரிவு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. ஹெலிகாப்டர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த உயர வரம்பை தியாகி குறைத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இவ்வாறு உயரத்தை குறைத்ததன் மூலம், அதுபோன்ற ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் ஆகஸ்டாவெஸ்ட்லேன்ட் நிறுவனத்தையும் டெண்டரில் பங்கேற்க செய்ததுள்ளதாக தியாகி மீது குற்றம்சாட்டப்படுகிறது.

English summary
In a significant development, the Enforcement Directorate (ED) on Friday registered a money laundering case against former Indian Air Force chief SP Tyagi who is one of several accused in the AgustaWestland VVIP chopper deal bribery case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X