For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் 7 வயது மகளை காப்பாத்துங்க ப்ளீஸ்: மன்றாடும் தந்தை

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்படும் தனது 7 வயது மகள் நலமாக வாழ உதவி கேட்டு மன்றாடுகிறார் ஏழை தந்தை ஒருவர்.

அனில் சால்வே என்பவர் உபேர் நிறுவனத்தில் டாக்சி டிரைவராக உள்ளார். மாதம் ரூ. 15 ஆயிரம் சம்பாதிக்கிறார். அவருக்கு பிரத்னியா(7), ஸ்வராலி என்று 2 மகள்கள்.

கிடைக்கும் வருவாயை வைத்து குடும்பத்தை நடத்தவே சரியாக உள்ளது. பிரத்னியா பிறந்து 6 மாதம் வரை நன்றாக இருந்துள்ளார். அதன் பிறகு அவரின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

6 மாத குழந்தை பிரத்னியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு தலசீமியா உள்ளதாக தெரிவித்தனர். பொம்மைகளுடன் விளையாட வேண்டிய வயதில் பிரத்னியா 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனையில் சேர்ந்து ரத்தம் ஏற்றிக் கொள்கிறார்.

இந்த இளம் வயதில் அவர் அதிகம் பார்த்தது ஊசி, மருந்து, மாத்திரை, மருத்துவமனை, டாக்டர்கள், நர்ஸுகளை தான். அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தால் அவர் நலமாக வாழலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கை ஸ்வராலியின் ரத்த வகை பிரத்னியாவுக்கு ஒத்துப் போவதால் அவரின் எலும்பு மஜ்ஜையை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த சிகிச்சைக்கு ரூ. 2 லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பிரத்னியாவின் மருத்துவ செலவால் அனில் அல்லாடுகிறார். இதனால் தயாள குணமுள்ளவர்களிடம் உதவி கேட்டு மன்றாடுகிறார்.

தினமும் ஊசி, 8 மாத்திரைகள் என்று இருக்கும் பிரத்னியா பிற குழந்தைகளை போன்று வாழ உதவுமாறு அனில் கெஞ்சுகிறார். பிரத்னியாவுக்கு உதவி செய்ய விரும்புவோர் Ketto மூலம் உதவி செய்யலாம்.

English summary
A Uber taxi driver is requesting the generous hearted to help his 7-year-old daughter live a normal life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X