For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்கள் ஆட்சிக்காக அலையவில்லை, அதற்காக கூட்டணியும் வைக்கவில்லை.. மெகபூபா பொளேர்!

நாங்கள் ஆட்சிக்காக அலையவில்லை என்றும் அதற்காக கூட்டணியும் வைக்கவில்லை என்றும் மெகபூபா முப்தி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மெகபூபா முப்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு-வீடியோ

    ஜம்மு: நாங்கள் ஆட்சிக்காக அலையவில்லை என்றும் அதற்காக கூட்டணி வைக்கவில்லை என்றும் மெகபூபா முப்தி தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீரில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பிடிபி கட்சியின் மெஹபூபா முப்தி முதல்வராக பதவி வகித்து வந்தார்.

    இந்த நிலையில், மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பாஜக பொறுப்பாளர் ராம்மாதவ் இன்று மதியம் நிருபர்கள் மத்தியில் அறிவித்தார். ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதற்கான கடிதத்தை மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    Here are 10 reasons for BJP exits J&K alliance

    இதையடுத்து ஆட்சி கவிழும் சூழல் உருவாக்கியதால் அவராகவே பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த கூட்டணி உடைய கீழ்கண்ட காரணங்கள் கூறப்படுகிறது.

    1. காஷ்மீரில் தீவிரவாதிகள் அதிகமானது. இதனால் ரம்ஜான் வரை பதிலடி தாக்குதல் நடத்த வேண்டாம் என்று மெஹபூபா கேட்டுக் கொண்டார். அதுபோல் அமைதி ஏற்படவே மெஹபூபா முயற்சித்தார்.

    2. கத்துவாவில் சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போதிலிருந்து இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு ஆதரவாக மாநில பாஜக தலைவர்கள் பேசினர். இதையடுத்து கைது செய்யப்பட்டவருக்கு நீதி கோரி நடத்தப்பட்ட பேரணியில் இரு எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

    3. அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்ட பிறகே மத்திய அரசும், பாஜகவும் தங்களது ஆதரவை மாநில அரசிடம் இருந்து திரும்ப பெற்று கொள்ள சரியான தருணம் என்று கூறப்பட்டது.

    4. வாழும் உரிமை, பேச்சு சுதந்திரம் உள்பட குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் அபாய கட்டத்தில் இருந்தது.

    5. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்த நாள் மூத்த பத்திரிகையாளர் சுஜாட் புகாரி உள்பட பாதுகாப்பு வீரர்கள் இருவர் ஸ்ரீநகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே நாளில் பாதுகாப்பு வீரர் ஒருவர் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது கடத்தி கொல்லப்பட்டார்.

    6. பத்திரிகையாளர் சுஜாட் கொல்லப்பட்ட பிறகும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தொடர கூடாது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை தொடங்குமாறு பாதுகாப்பு படை வீரர்களுக்கு உத்தரவிட்டார்.

    7. 89 எம்எல்ஏக்கள் கொண்ட ஜம்மு சட்டசபையில் பாஜகவுக்கு 25 எம்எல்ஏவும், பிடிபி கட்சிக்கு 28 எம்எல்ஏவும் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 45 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு 12 எம்எல்ஏக்கள் இருந்தாலும் பிடிபியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

    8. கடந்த 2015-ஆம் ஆண்டு இரு கட்சிகளும் ஆட்சி வந்தவுடனேயே பிரிவினைவாதிகளுடனான பேச்சுகள், ஆயுத படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெறும் திட்டம் வாக்குறுதிகளில் இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

    English summary
    Why the BJP exits from Jammu and Kashmir alliance. Here are 10 reasons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X