For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தான்: பாஜக, வசுந்தரா ராஜே சரிவுக்கான அந்த 8 காரணங்கள்!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் ஆரம்பித்தவுடன் காங்கிரஸின் சச்சின் பைலட்டும் பாஜகவின் வசுந்தரரா ராஜேவும் போட்டி போட்டு கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ், பாஜக மாறி மாறி முன்னணி வகித்து வந்தன.

தோற்கடிப்பு

தோற்கடிப்பு

ஆனால் பின்னர் நிலைமை மாறியது. காங்கிரஸ் மேலே வந்து விட்டது. முதல்வர் வசுந்தரா ராஜே ஜல்ராபதான் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அங்கு அவர் லீடிங்கில் உள்ளார்.

மக்களை கவரும் முயற்சி

மக்களை கவரும் முயற்சி

வசுந்தரா ராஜே வெற்றி பெற்றாலும் கூட மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தவறி விட்டார். ஒட்டுமொத்த கட்சியையும் தோல்வியிலிருந்து அவர் மீட்க முடியவில்லை. இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. பாஜக மக்களை கவரும் முயற்சிகளில் ஈடுபடவில்லை என்பது ஒரு காரணம்.

விவசாயிகளுக்கான கடன்

விவசாயிகளுக்கான கடன்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் வசுந்தரா ராஜேவோ விவசாயிகளின் துயரை துடைக்க தவறிவிட்டார்.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

வசுந்தரா ராஜேவின் தனிப்பட்ட குணாதிசியமும் ராஜஸ்தானில் பாஜகவின் தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது. வசுந்தரா எப்போதும் தன்னை மகாராணியாக பாவித்துக் கொள்வதும், அவரது செயல்பாடற்ற போக்குமே பாஜக தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.

முழு கவனம்

முழு கவனம்

அது போல் ராஜபுத்திர சமுதாயத்தைச் சேர்ந்த அனந்தபால் சிங்கை போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுத் தள்ளியதால் ராஜபுத்திரர்கள் பாஜகவுக்கும் வசுந்தரா ராஜேவுக்கும் எதிரான மனநிலைக்கு வந்து விட்டனர். சாலைகளை விரிவுப்படுத்தும் திட்டத்தின் போது பல்வேறு கோயில்கள் சேதமடைந்துவிட்டன. இதுவும் பாஜக மீது மக்கள் வெறுப்படைய செய்தது. பாஜகவின் முன்னோடி அமைப்பான ஆர்எஸ்எஸ் வசுந்தரா ராஜே அரசுடன் முழு ஈடுபாட்டுடன் செயல்படவில்லை.

ஆட்சி நடத்தும்

ஆட்சி நடத்தும்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரியும் என்பது தெரிந்த ஒன்றுதான். இது 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஒரு வேளை இந்த தேர்தலில் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கிறது என்றால் ஆட்சியை தக்க வைத்த முதல் கட்சி பெருமையைப் பெற்றிருக்கும்.

English summary
Vasundhara Raje is losing in Rajasthan assembly election. Here are the reason for BJP'd defeat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X