For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகார் சட்டசபையில் கட்சிகளின் பலம் என்ன தெரியுமா?

பீகார் சட்டசபையில் கட்சிகளுக்கு இருக்கும் பலம் என்ன என்பதை பார்க்கலாம்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

பாட்னா : பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், சட்டசபையில் அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் பலம் என்ன என்பதை பார்க்கலாம்.

ஊழல் புகாரில் சிக்கிய லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவி விலகாததை அடுத்து முதல்-மந்திரி பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்து உள்ளார். முதல்வர் நிதிஷ்குமாரைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள அமைச்சர்களும் விரைவில் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

 243 சட்டசபை தொகுதிகள்

243 சட்டசபை தொகுதிகள்

இந்நிலையில் பீகார் சட்டசபையில் கட்சிகளுக்கு இருக்கும் பலம் என்ன என்பதை பார்க்கலாம். பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2015ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

 கட்சிகளின் பலம்

கட்சிகளின் பலம்

அந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 58 உறுப்பினர்கள் பலம் கிடைத்தது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்திற்கு 71 எம்எல்ஏக்களும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சிக்கு 80 எம்எல்ஏக்களும் உள்ளனர். காங்கிரசின் பலம் 27. ஆட்சியமைக்க 122 எம்எல்ஏக்கள் தேவை.

 பெரும்பான்மை இல்லை

பெரும்பான்மை இல்லை

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவும் பொறுப்பேற்றனர்.

பரபரப்பு

பரபரப்பு

இந்நிலையில் இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Bihar assembly strength partywise as in 2015 assembly elections, no party has majority as of now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X