For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதார் கார்டு விவகாரத்தில் ஆதி முதல் அந்தம் வரை நடந்தது என்ன?... பரபரக்க வைத்த தீர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம்...சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு- வீடியோ

    டெல்லி: அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட பெஞ்ச்சில் 4 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இந்த வழக்கில் ஆதி முதல் அந்தம் வரை நடந்தது என்ன?

    வங்கிச் சேவை, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், கேஸ் இணைப்பு உள்ளிட்டவற்றை பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கி வருகிறது. 5 நீதிபதிகளில் 4 பேர் ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஆதி முதல் அந்தம் வரை நடந்தது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

    Here is the chronological events in Aadhar card case

    செப்டம்பர் 2013- ஆதார் அட்டை என்பது முழுக்க முழுக்க தாங்களாகவே மக்கள் முன்வந்து பெறும் ஒன்றாக இருக்க வேண்டும். யாரையும் பெறுமாறு
    கட்டாயப்படுத்தக் கூடாது. அதே நேரத்தில் ஆதாரை வழங்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு. 45 ஆயிரம் போலி கேஸ் இணைப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் ஆதார் மூலம் கண்டுபிடித்து அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.23 கோடி சேமிக்கப்பட்டது.

    [அரசுக்கு கட்டாயம்.. தனியாருக்கு தேவையில்லை.. ஆதார் தீர்ப்பின் முழு விபரம்!]

    2014, 24 மார்ச் ஆதார் இல்லை என்பதற்காக எந்த திட்டத்தையும் யாருக்கும் மறுக்க கூடாது.

    2015, ஆகஸ்ட் 11 பொது விநியோக திட்டம், எரிவாயு உருளை இணைப்பு பெற மட்டுமே ஆதார் கட்டாயம். வேறு எந்த சேவைக்கும் ஆதார் கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு

    2015, அக்டோபர் 15 மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஊரக வேலைவாய்ப்பு திட்டம், அனைவருக்கும் வங்கி கணக்கு , வைப்பு நிதி ஆகியவற்றுக்கும் ஆதார் கட்டாயம் என உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றம்.

    2017- ஆரம்ப கட்டத்தில் செல்போன் எண் பெறவும் இன்னும் சில வசதிகளுக்கும் ஆதாரை செல்போன் நிறுவனங்கள் கட்டாயமாக்கின. இடைக்கால தீர்ப்பு ஒன்றில் மறு உத்தரவு வரும் வரை செல்போன் எண் பெறவோ வேறு எந்த சேவைகளுக்கோ ஆதாரை கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

    18 ஜூலை - ஆதார் குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளதா என ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    24 ஆகஸ்ட்- தனி மனிதனின் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே என முன்னாள் நீதிபதி புட்டாசாமி தொடர்ந்து வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.

    [வங்கி சேவைகளுக்கு ஆதார் எண் அவசியம் இல்லை- சுப்ரீம் கோர்ட் அதிரடி ]

    அக்.2017- ஆதார் அட்டை கட்டாயம் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்துவதை எதிர்த்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இதே வேளையில் ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தவில்லை என மத்திய அரசு வாதிட்டது. அத்துடன் சமூக நல திட்டங்களுடன் ஆதாரை இணைப்பது சரியே என்று 100 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.மேலும் ஆதார் அட்டையை பெற 2018, மார்ச் 31- வரை கால நீட்டிப்பு செய்வதாகவும் அறிவித்தது.

    நவம்பர் 2017- வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதை தடுக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் வங்கிக் கணக்குகள் மற்றும் செல்போன் எண்களுடன் ஆதாரை இணைக்க கடைசி தேதி குறித்து அறிவிக்குமாறு வங்கிகள் மற்றும் செல்போன் சேவை நிறுவனங்கள் தெளிவுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

    17 ஜனவரி, 2018- உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் ஆதார் செல்லுபடி ஆகுமா, ஆகாதா, ஆதார் அந்தரங்க உரிமையை மீறுவதாக உள்ளதா என்பதற்கான விசாரணை தொடங்கியது.

    10 மே 2018- ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    26 செப்டம்பர்- அரசின் சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

    English summary
    Here are the chronological events happened in the Aadhar card mandatory case which is pending in SC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X