For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை.. கர்நாடக அணைகளில் நீர் இருப்பு நிலவரம் இதுதான்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மைசூர்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், காவிரி நீரை தேக்கி வைக்கும், கபினி, கேஆர்எஸ், ஹாரங்கி, ஹேமாவதி அணைக்கட்டுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இன்றைய நிலவரப்படி அணையிலுள்ள தண்ணீர் நிலவரம் மற்றும் உள்வரவு, வெளியேறும் நீர் நிலவரத்தை பாருங்கள்.

Here is the detail of Cauvery reservoirs capacity

ஹாரங்கி- மொத்த கொள்ளளவு- 2859 அடி. இப்போதைய நீர் இருப்பு, 2827.08 அடி. வரத்து- 2145 கன அடி. திறப்பு-30 கன அடி.

ஹேமாவதி- மொத்த கொள்ளளவு-2922 அடி. இப்போதைய நீர் இருப்பு, 2897.16 அடி. வரத்து-19242 கன அடி. திறப்பு-200 கன அடி.

கபினி- மொத்த கொள்ளளவு-2284 அடி. இப்போதைய நீர் இருப்பு, 2279.70 அடி. வரத்து-36650 கன அடி. திறப்பு-16208 கன அடி.

கே.ஆர்.எஸ்-மொத்த கொள்ளளவு 124.80 அடி. இப்போதைய நீர் இருப்பு 94.50 அடி. வரத்து-28096 கன அடி. திறப்பு 416 கன அடி.

இதில், கே.ஆர்.எஸ் தவிர்த்த மற்ற அணைகளின் உயரம் என்பது கடல் மட்டத்தில் இருந்து அவை இருக்கும் உயரத்தை வைத்து கணக்கிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Here is the detail of Cauvery reservoirs capacity and inflow and other detail in the Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X