For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாப்: இந்தியா- பாக். எல்லையில் ரூ. 110 கோடி ஹெராயின் பறிமுதல்

Google Oneindia Tamil News

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா - பாகிஸ்தான் எல்லையருகே அபோஹர் செக்டர் எனுமிடத்தில் இந்தியாவுக்குள் கடத்த முயன்ற 110 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பஞ்சாப் மாநில எல்லைப் பாதுகாப்பு படைத் தலைவர் அணில் பாலிவால் கூறும்போது,

Heroin worth Rs 110 crore seized in Punjab

அதிக அளவு போதைப்பொருட்களை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஒரு கும்பல் கடத்தி வர உள்ளதாக உளவுத்துறையிடமிருந்து தகவல் கிடைத்தது, ஜலந்தர் மாவட்டத்திலுள்ள அபோஹர் செக்டர் பஹடுர்கே சோதனைச் சாவடிக்கு அருகாமையில் உள்ள இந்திய-பாக் எல்லைப் பகுதியை எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

நேற்று அதிகாலை அந்த பகுதியில் சிலரின் நடமாட்டம் தென்பட்டது. அப்போது எல்லைப் பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து துப்பாக்கிகளால் சுட்டனர். இதையடுத்து, அவர்கள் தப்பி ஓடினர். காலை விடிந்ததும் அந்த இடத்தில் சென்று பார்த்தபோது அங்கே 22 பாக்கெட்களில் ஹெராயின் போதைப்போருகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு 110 கோடி ரூபாய் ஆகும். அதனை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்", என்றார்.

English summary
The Indian Customs and the BSF, in a joint operation, on Friday seized 22 kg of heroin worth Rs 110 crore in the international market, which was smuggled from Pakistan into the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X