For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லையில் பதற்றம்... உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்தனர். எல்லையில் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது இம்மாதத்தில் இது 9-வது முறை.

High-level meet over ceasefire violations by Pakistan in North Block

ஜம்மு மாவட்டம் அக்னூர் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார். எல்லை பாதுகாப்பு வீரர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இப்படி எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அண்மையில் நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Top ministers of the Narendra Modi government met and discussed the situation arising out of ceasefire violations by Pakistani troops along the Line of Control in Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X