For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ கான்வாய்.. உச்சகட்ட பாதுகாப்பு.. இப்படித்தான் வாகா அழைத்து வரப்பட்டார் அபிநந்தன்!

Google Oneindia Tamil News

Recommended Video

    வாகா எல்லைக்கு இப்படித்தான் அழைத்து வரப்படுகிறார் அபிநந்தன்- வீடியோ

    ஸ்ரீநகர்: மிக அதிக அளவிலான பாதுகாப்புடன் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டார்.

    பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார். இன்று மதியம் இவர் விடுவிக்கப்பட்டார்.

    நேற்று முதல்நாள் விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று இவரை விடுவிக்க போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.

    [Read more: அபிநந்தன் விடுதலையின் பின்னணியில் அமெரிக்கா, செளதி அரேபியா, யுஏஇ.. !]

    ஹெலிகாப்டர் மூலம் வருகிறார்

    ஹெலிகாப்டர் மூலம் வருகிறார்

    இவர் தற்போது பாகிஸ்தானின் ராணுவ தளவாடம் ஒன்றின் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார். அங்கிருந்து அபிநந்தன் ஹெலிகாப்டர் மூலம் லாகூர் கொண்டு வரப்பட்டார். இவர் வரும் ஹெலிகாப்டரை சுற்றி பாகிஸ்தானின் விமானப்படை விமானங்கள் வந்தது. பாதுகாப்பிற்காக இரண்டு விமானங்கள் அருகருகே வந்தது.

    1 மணி நேரத்தில் வந்தார்

    1 மணி நேரத்தில் வந்தார்

    மொத்தம் இந்த வான்வெளி பயணம் ஒரு மணி நேரம் இருந்ததை. இதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க அங்கு வான்வெளி முழுக்க அதீத, ரேடார் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. பாகிஸ்தானின் விமானபடையை துரத்தி சென்றவருக்கு பாகிஸ்தான் விமான படையே முழு பாதுகாப்பு அளித்தது.

    25 கிலோ மீட்டர்

    25 கிலோ மீட்டர்

    அதன்பின் லாகூரில் இருந்து வாகா எல்லைக்கு ராணுவ வாகனம் மூலம் அபிநந்தன் கொண்டு வரப்பட்டார். வாகா எல்லைக்கும் லாகூருக்கும் 25 கிமீ தூரம் இருக்கிறது. இந்த தூரத்தை அவர்கள் ராணுவ வாகனத்தில் அபிநந்தனை அழைத்து வந்தனர்.

    அசாத்திய பாதுகாப்பு

    அசாத்திய பாதுகாப்பு

    இந்த பயணத்தின் போது அபிநந்தனுக்கு பெரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த 25 கிமீ தீவிரவாத அச்சுறுத்தல் இருக்க கூடிய இடம் ஆகும். அதனால் அபிநந்தனை பெரிய கான்வாய் உதவியுடன் முன்னும் பின்னும் ஆயுதம் தாங்கிய ராணுவ வாகனங்களின் பாதுகாப்புடன் இந்தியா கொண்டு வந்து இருக்கிறார்கள்.

    யாரிடம் ஒப்படைப்பு

    யாரிடம் ஒப்படைப்பு

    அதன்பின் வாகா எல்லை கொண்டு வரப்பட்டபின் அவர் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டார். வாகா எல்லையில் மாலையில் நடக்கும் கேட் திறக்கும் சம்பிரதாயங்கள் இன்று இதற்காக முதல்முறை கைவிடப்பட்டது. முதல்முறை இப்படி நடந்தது குறிப்பிடத்தக்கது.

    சில விதிமுறைகள்

    சில விதிமுறைகள்

    இதன்பின் சில விதிமுறைகளை பின்பற்றி அவர் சில மணி நேரங்கள் கழித்து டெல்லி செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் இது தொடர்பான துல்லியமான நேரம் எதுவும் கூறப்படவில்லை. அவரிடம் மருத்துவ சோதனைகள் உள்ளிட்ட சில சோதனைகள் இனி செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    High Protection to Air Security: This is how IAF Pilot Abhinandan reach Wagha from Pakistan's Lahore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X