For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடிக்கும் முன்னாடி ஒருத்தார் இந்த வேலையைச் செய்துள்ளார்!

பிரதமர் மோடிக்கு முன்பு 1978ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் ரூ. 100க்கு மேல் இருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த சம்பவத்தை நாடு பார்த்தது.

Google Oneindia Tamil News

டெல்லி: பெரிய ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த 2வது பிரதமர் நரேந்திர மோடி. அவருக்கு முன்பு இதேபோன்ற அதிரடியைச் செய்த பிரதமர் மொரார்ஜி தேசாய்.

இருவருமே காங்கிரஸ் சம்பந்தப்படாத பிரதமர்கள் என்பது இதில் வித்தியாசமான ஒற்றுமையாகும். இந்திய வரலாற்றில் இதுவரை 2 முறை மட்டுமே பெரிய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்த முடிவுகளை அறிவித்த இரு பிரதமர்களுமே குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.

1978ல்

1978ல்

1978ம் ஆண்டு பிரதமராக இருந்த ஜனதாக் கட்சியின் மொரார்ஜி தேசாய் ரூ. 100க்கு மேல் இருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.

கள்ள நோட்டு அட்டகாசம்

கள்ள நோட்டு அட்டகாசம்

அப்போதும் கருப்புப் பணமும், கள்ள நோட்டுக்களும்தான் இந்த முடிவை எடுக்க தேசாயைத் தூண்டியது. தற்போதும் கூட அதே காரணத்திற்காகவே 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பிரதமர் மோடி ஒழித்துள்ளார்.

இங்கிலாந்து ஆட்சியின்போது

இங்கிலாந்து ஆட்சியின்போது

1938ம் ஆண்டு நாடு இங்கிலாந்து வசம் இருந்தபோது ரூ. 10,000 நோட்டை வெள்ளையர் அரசு அறிமுகப்படுத்தியது. அதன் புது வடிவம் பின்னர் 1954ல் வெளியானது. இதை பிறகு 1946 மற்றும் 1978ல் இந்திய அரசுகள் ஒழித்தன.

1000-5000-10,000

1000-5000-10,000

பின்னர் மொரார்ஜி தேசாய் பதவிக்கு வந்தபோது 1000, 5000, 10,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களை ஒழித்தார். அது அப்போது பெரும் பரபரப்பாக இருந்தது.

மீண்டு வந்த 500

மீண்டு வந்த 500

பின்னர் 1987ல் 500 ரூபாய் நோட்டு மீண்டும் அறிமுகமானது. அதேபோல 2000மாவது ஆண்டு நவம்பர் மாதம் 1000 ரூபாய் நோட்டும் திரும்பி வந்தது.

தற்போது 500ம், 1000மும் திரும்பிப் போயுள்ளது.

English summary
Prime Minister Narendra Modi made a big announcement on Tuesday by declaring Rs 500 and 1,000 notes as invalid. While the move has received mixed reactions, one must know that this is the second time in the history of India that high value notes are being scrapped. Back in 1978, the then Prime Minister, Morarji Desai had banned all currency above the Rs 100 denomination. That year too the ban was enforced to tackle the problem of black money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X