For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கஷ்டப்பட்டு ஹிமா தாஸ் தங்க பதக்கம் வாங்கியிருக்கு.. நம் மக்களோ கூகுளில் எதை தேடியுள்ளார்கள் பாருங்க

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஹிமா தாஸின் சாதியை அதிகம் தேடிய நெட்டிசன்ஸ்- வீடியோ

    டெல்லி: பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) சார்பில், 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10 ம் தேதி துவங்கியது.

    இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹிமா தாஸ் தங்க பதக்கம் வென்றார்.

    Hima Das’ caste highly searched on Google

    இதன் மூலம் சர்வதேச தடகள கழகத்தின், ஜூனியர் மட்டத்திலான, சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை ஹிமா தாஸ் பெற்றுள்ளார். அவருக்கு தற்போது 18 வயது ஆகும்.

    இதற்கு முன் 2002 ல் சீமா புனியா மற்றும், 2014 ல் நவஜீத் கவுர் தில்லான் ஆகியோர் இதுபோன்ற தொடரில் இந்தியா சார்பில் வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    ஆனால், இதுபோன்ற சாதனைகளையெல்லாம் விட்டுவிட்டு, ஹிமா தாஸ் என்ன ஜாதி என்பதை இந்திய நெட்டிசன்களில் பலரும் கூகுளில் தேடி பார்த்துள்ளனர்.
    Hima Das என்று கூகுளில் டைப் செய்தாலே, அதிகப்படியாக மக்கள் தேடிய விஷயம் பரிந்துரையாக காண்பிக்கப்படும். அதில் ஹிமா தாஸ் ஜாதி என்பதுதான் டாப்பில் உள்ளது.

    Hima Das’ caste highly searched on Google

    அதன்பிறகுதான் அவர் இன்டர்வியூ, அவர் தங்க பதக்கம் வென்றது போன்ற கேள்விகள் இடம் பிடித்துள்ளன. இந்திய சமூகம் எந்த அளவுக்கு ஜாதி சார்ந்ததாக உள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம் இது. ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில், இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து வெள்ளி வென்றபோதும், அவரது ஜாதியை அதிகம் பேர் கூகுளில் தேடியிருந்தனர்.

    English summary
    The Google search on Hima Das, particularly her caste, saw a spike after she won the gold.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X