For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இமாச்சலில் கன மழை.. சீட்டுக்கட்டு போல சரிந்த தாபா.. ராணுவ வீரர்கள் உட்பட பலர் சிக்கினர்.. இருவர் பலி

Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால், சீட்டு கட்டு போல் கண் இமைக்கும் நேரத்தில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில், 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சோலன் மாவட்டம், குமர்ஹாட்டியில் கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிடம் ராணுவத்திற்கு சொந்தமானது என தெரிகிறது. இதுகுறித்து தகவலறித்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், பஞ்ச்குலாவிலிருந்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Himachal Pradesh: Two people dead & 22 have been rescued after a building collapsed in Kumarhatti

குமர்ஹாட்டி - நஹன் சாலையில் இடிந்து விழுந்த கட்டிடம் ஒரு 'தாபா'. 30 ராணுவ வீரர்கள் மற்றும் 7 உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்தில் இருந்தனர். 18 ராணுவ வீரர்கள் மற்றும் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 14 சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக, பேரிடர் மேலாண்மை சிறப்பு அதிகாரி டி.சி. ராணா கூறியுள்ளார்.

மதிய வேளைகளில் ராணுவ வீரர்கள் சாப்பிடுவதற்காக இங்கே வந்து செல்லும் நிலையில், மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக, ஹெலிகாப்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமர்ஹாட்டி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுகின்றனர். இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

English summary
#HimachalPradesh: The building that collapsed in Kumarhatti was a 'Dhaba'. 30 Army men & 7 civilians were present at the spot. 18 Army men & 5 civilian rescued. 2 bodies recovered. 14 feared trapped; rescue operations continue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X