For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடம்பை வளைச்சு உள்ளே போய்.. அதெல்லாம் இல்லைங்க.. இதுதான் ஒரிஜனல் பாபா குகை!

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி தியானம் செய்த சொகுசு குகையில் வேற லெவல் ஏற்பாடு

    டேராடூன்: கேதர்நாத்தில் பிரதமர் மோடி 18 மணிநேரம் குகைக்குள் அமர்ந்து தியானம் செய்ததாக வெளியான படம் ஏராளமான ஆராய்ச்சிகளை நோக்கி திருப்பிவிட்டிருக்கிறது. மோடி குகை என இனி வரலாற்றில் அதற்கு இடம் கிடைத்துவிடும்.. இதே இமயமலையில்தான் புகழ்பெற்ற பாபா குகை சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

    இமயமலை... பாபா குகை.. என்ற உடன் அப்படி எல்லாம் சாதாரணமாக அந்த குகைக்குள் நுழைந்துவிட முடியாது; உடம்பை வளைத்து உள்ளே செல்ல உடற்பயிற்சிகள் எல்லாம் செய்திருக்க வேண்டும்; அது ஆபத்தான குகை என்றெல்லாம் அடேங்கப்பா பில்டப்புகள் ஏராளம்.

    Himalayas Baba Cave

    உண்மையில் பாபா குகை எங்கேதான் இருக்கிறது? உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது பாபா குகை.

    அம்மாநிலத்தின் நைனிடாலை கடந்து தார்கட் என்ற நகரத்தை தாண்டி சென்றால் குகுசினா என்கிற சிறுநகரம் வரும். அங்கு நுழைந்தவுடன் நம்மை வரவேற்கும் ஜோஷி டீ ஸ்டால். அந்த கடையின் உரிமையாளரே பாபா குகைக்கு செல்லும் வழியை காட்டி விடுவார். 2 கிலோ மீட்டர் தொலைவு மலைக்குள் நடந்து செல்ல வேண்டும்.

    Himalayas Baba Cave

    ஒய்.எஸ்.எஸ். ஆப் இந்தியா என்ற அமைப்புதான் பாபா குகையை நிர்வகித்து வருகிறது. பொதுவாக குகையை பூட்டி சாவியை கிராம மக்களிடம் கொடுத்து விடுவர். சுற்றுலா பயணிகள் சென்றால் திறந்து காட்டுவார்கள்.

    அதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல் அதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்

    ஒரு ஆள் உள்ளே உட்கார்ந்து தவம் இருக்கலாம். அந்த அளவுதான். மிகவும் தூய்மையாகத்தான் வைத்திருக்கிறார்கள். சர்வ சாதாரணமாக உள்ளே சென்று வெளியே வந்துவிடலாம்.

    நாம் கேள்விபட்டது போல அல்லது நமக்கு கற்பிக்கப்பட்டதைப் போல உடலை வருத்தி உள்ளே புக வேண்டும். மிகவும் ஆபத்து நிறைந்த இடம் எல்லாம் கிடையாது பாபா குகை.

    இந்த படங்களைப் பாருங்க.. இதுதான் ஒரிஜனல் பாபா குகை.. அப்ப அந்த மாதிரி உள்ளே நுழைந்து கும்மிருட்டில் போஸ் கொடுத்தது எல்லாம்.. அவங்களுக்கே 'வெளிச்சம்'

    English summary
    Mahavatar Babaji cave is the Most Spiritual Caves in Himalayan Region, which is the origin of Kriya yoga and Where Yoga Guru Lahiri Mahasaya got Kriya Yoga teachings directly from Mahaavatar Baba Ji.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X