For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளியானது புள்ளி விவரம்.. இந்தியாவில் அதிகம் பேசப்படும் முதல் 3 மொழிகள் எவை தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அதிகம் பேசப்படும் முதல் 3 மொழிகள் எவை?..வெளியானது புள்ளி விவரம்..வீடியோ

    டெல்லி: இந்தியாவில் அதிக மக்களின் தாய் மொழி எவை என்பது குறித்த சுவாரசிய தகவல் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    இந்தியாவில், அதிகம்பேசப்படும் மற்றும் பழமையான மொழிகளான தமிழ், ஹிந்தி உட்பட மொத்தம் 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறைந்த மக்களால் பேசப்படும் சமஸ்கிருதமும் இதில் ஒன்று.

    இந்த நிலையில், 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் பல சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    ஹிந்திக்கு முதலிடம்

    ஹிந்திக்கு முதலிடம்

    இந்தியாவில் அதிகப்படியான மக்கள் தங்கள் தாய் மொழி ஹிந்தி என கூறியுள்ளனர். மொத்த மக்கள் தொகையில், 43.63 சதவீதம் பேர் ஹிந்தியை தங்கள் தாய் மொழி என குறிப்பிட்டுள்ளனர். 2001ம் ஆண்டில் இது 41.03ஆக இருந்தது. ஹிந்தியை தாய்மொழி என்போர் எண்ணிக்கை பத்தாண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.

    வங்க மொழி

    வங்க மொழி

    இந்தியாவில் 2வதாக அதிகப்படியான மக்களின் தாய்மொழியாக விளங்குவது தெலுங்கு அல்ல, வங்க மொழி என்பதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின், 8.3 சதவீத மக்களின் தாய்மொழி வங்கமாகும்.

    மராத்தி முன்னேற்றம்

    மராத்தி முன்னேற்றம்

    3வது இடத்தில் இருந்த தெலுங்கை 4வது இடத்திற்கு தள்ளி மராத்தி அந்த இடத்தை கைப்பற்றியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு 6.99 சதவீதமாக இருந்த மராத்தியை தாய் மொழியை கொண்டோர் எண்ணிக்கை இப்போது 7.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    தெலுங்கிற்கு 4வது இடம்

    தெலுங்கிற்கு 4வது இடம்

    தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் எண்ணிக்கை 7.19 சதவீதத்தில் இருந்து 6.93 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் தெலுங்கு பேசுவோர் எண்ணிக்கை அடிப்படையில் 4வது இடத்தில் உள்ளனர். 2001ல் 6வது இடத்தில் இருந்த உருது, இப்போது 4.34 சதவீதமாக 7வது இடத்திற்கு சென்றுள்ளது. குஜராத்தி பேசுவோர் 4.74 சதவீதமாக இருப்பதால் அம்மொழி 6வது இடத்தை பிடித்துள்ளது.

    English summary
    The percentage of Indian population with Hindi as their mother tongue has risen to 43.63% from 41.03% in 2001, according to data on language released on Tuesday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X