For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"தேஜோ மஹாலயா கோவில்" தான் தாஜ் மஹால்.. இந்து மஹா சபை சர்ச்சை காலண்டர்!

7 மசூதிகள் மற்றும் முகலாய காலத்து நினைவிடங்கள் அனைத்தும் இந்து ஆலயங்கள் என்று குறிப்பிட்டு இந்து மஹா சபை வெளியிட்டுள்ள காலண்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

ஆக்ரா: இந்து மஹா சபையின் அலிகார் பிரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புத்தாண்டு காலண்டரால் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த நாள்காட்டியில் மசூதிகள், தாஜ்மஹால் உள்ளிட்ட அனைத்தும் இந்து ஆலயங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தாஜ் மஹால் தேஜோ மஹாலயா ஆலயம் என்று இந்து மஹா சபையின் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் கமல்மௌலா மசூதி போஜசாலை என்றும், காசி க்யான்வியாபி மசூதி விஸ்வநாதர் ஆலயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று குதுப் மினார் விஷ்ணுவின் தூண், ஜான்பூரின் அடாலா மசூதி அட்லா தேவி ஆலயம் மற்றும் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

Hindu Maha sabhas new year calendar claiming mosques as hindu temples

பிரதமர் நரேந்திர மோடியும், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நாட்டை இந்துக்களின் நாடாக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த காலண்டர் அவர்களின் இலக்கை அடைய உதவியாக இருக்கும், இந்துக்களின் வேர்களை கொண்டாடும் விதமாகவே இந்த காலண்டர் அச்சடிக்கப்பட்டுள்ளதாக இந்து மஹா சபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் படையெடுத்து வந்தவர்கள் இந்து மத அடையாளங்களை அழித்து இஸ்லாமியப் பெயர்களை சூட்டினர். தற்போது அவற்றை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டிய நேரமிது. நாங்கள் இந்த காலண்டரில் குறிப்பிட்டுள்ளது போல அந்தந்த இடங்களின் இயற்பெயரிலேயே அவை அழைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றும் பூஜா கூறியுள்ளார்.

இந்து மஹா சபையினரின் இந்த கூற்று பற்றி கருத்து தெரிவித்த அனைத்து இந்திய இஸ்லாமிய சட்ட அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இமாம் - ஈ- ஈத்கா மௌலானா கலித் ரணீத் பிராங்கி மஹாலி, இவை அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளார். தேவையற்ற சர்ச்சைகளை வெளியிட்டு இவர்கள் மதக்கலவரத்தையும் வெறுப்பையும் தூண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Hindu Mahasabha’s Aligarh unit's Hindu New Year calendar claims seven mosques and monuments of Mughal era, including the Taj Mahal, have been referred to as Hindu temples creates controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X