For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவை மத ரீதியாக பிரித்ததே இந்து மகா சபாதான்.. அமித் ஷா பேச்சுக்கு ஆனந்த் சர்மா பதிலடி!

இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்க காரணமாக இருந்ததே இந்து மகா சபாவும், முஸ்லீம் லீக்கும்தான் என்று காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா ராஜ்ய சபாவில் பேசி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமித் ஷா பேச்சுக்கு ஆனந்த் சர்மா பதிலடி!

    டெல்லி: இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்க காரணமாக இருந்ததே இந்து மகா சபாவும், முஸ்லீம் லீக்கும்தான் என்று காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா ராஜ்ய சபாவில் பேசி உள்ளார்.

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கடுமையான வாதங்கள் ராஜ்யசபாவில் வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது.

    நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

    இந்திய முஸ்லீம்கள் பயப்பட வேண்டாம்.. உங்களுக்கு பிரச்சனை இல்லை.. குடியுரிமை சட்டம் பற்றி அமித் ஷா! இந்திய முஸ்லீம்கள் பயப்பட வேண்டாம்.. உங்களுக்கு பிரச்சனை இல்லை.. குடியுரிமை சட்டம் பற்றி அமித் ஷா!

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    இந்த மசோதாவை எதிர்த்து பேசிய காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா, ஏன் இந்த மசோதாவை இவ்வளவு அவசரமாக தாக்கல் செய்கிறீர்கள். எதிர் கட்சிகளின் எதிர்ப்பு அரசியல் ரீதியானது இல்லை. கொள்கை ரீதியானது. இந்திய அரசியலமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது. அரசியலமைப்பு சட்டத்திற்கு அடிப்படையை இது கேள்வி கேட்கிறது.

    பெரும் கோபம்

    பெரும் கோபம்

    சட்டத்தை உருவாக்கியவர்களை இது அவமானப்படுத்துகிறது. அவர்களின் நோக்கை நீங்கள் அசிங்கப்படுத்துகிறீர்கள். பாகிஸ்தானில் இருந்து பிரிவினைக்கு பின் இந்தியா வந்தவர்களுக்கு இந்தியா இடம் கொடுத்துள்ளது. அதில் ஒருவர்தான் டாக்டர் மன்மோகன் சிங், இன்னொருவர் ஐகே குஜ்ரால். இதை எல்லாம் யாரும் மறக்க கூடாது.

    அடிப்படை கேள்வி

    அடிப்படை கேள்வி

    இந்த சட்டத்தின் அடிப்படையை நீங்கள் உடைக்க முயல்கிறீர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் இதை எதிர்க்க வேண்டும். ஆனால் இதை அரசியலாக்க கூடாது .இரண்டு நாடு என்ற திட்டத்தை கொண்டு வந்ததே இந்து மகாசபாதான். இதை ஜின்னா கொண்டு வர, இந்து மகாசபா 1937ல் குஜராத்தில் அறிமுகம் செய்தது. இதை பற்றி அமித் ஷா பேச மாட்டார்.

    தலையீடு

    தலையீடு

    இதில் பிரிட்டிஷ் அரசின் தலையீடும் இருக்கிறது. முஸ்லீம் லீக், இந்து மகா சபா இணைந்துதான் இந்தியாவை பிரித்து வடகிழக்கு மாநிலமே பொங்கி எழுந்துள்ளது அங்கு போராட்டங்கள் நடந்து வருகிறது அந்த மக்கள் உங்கள் சட்டத்தை பார்த்து பயப்படுகிறார்கள்

    அகதிகள் முகாம்

    அகதிகள் முகாம்

    அகதிகள் முகாம்களுக்கு அமித் ஷா ஒருமுறையாவது சென்று பார்த்து இருக்கிறாரா? அங்கு மக்கள் எப்படி இருப்பார்கள், எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அங்கு சென்று பார்த்தால்தான் அவருக்கு அகதிகள் முகாமின் வலி தெரியும்

    English summary
    Hindu Maha Sabha was the one who divided India into Two says Anand Sharma on the Citizenship Amendment Bill discussion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X