For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது நாற வாய்... நீ வேண்டாம்.... குடிகார மாப்பிள்ளையை நிராகரித்து தூதுவரான சட்டீஸ்கர் பெண்

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: மணமேடைக்கு மாப்பிளை குடித்துவிட்டு வந்ததால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வெளியேறிய பெண் அம்மாநிலத்தின் பெண்கள் மேம்பாட்டுக்கான தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த ஊர்மிளா சோன்வானி என்ற பெண், இந்தியாவின் பெரும்பாலான பெண்கள் செய்ய துணியாத ஒரு செயலை செய்துள்ளார்.

தனக்கு பெற்றோர் அனைத்து பொருத்தங்களையும் பார்த்து நிச்சயித்த மணமகன் குடித்துவிட்டு மணமேடைக்கு வந்தது மட்டும் அல்லாமல் அக்கினி குண்டத்தை கூட தனியாக சுற்றி வரமுடியாத அளவிற்கு போதையில் இருந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண், துணிச்சலுடன் இந்த குடிகாரனை திருமணம் செய்துக்கொள்ள முடியாது எனக்கூறி திருமணத்தை நிறுத்திவிட்டு வெளியேறினார்.

ஊர்மிளாவின் நிலையில் வேறு பெண்கள் இருந்திருந்தால் பெற்றோர் மற்றும் உறவினர்களின் செண்டிமென்ட் நாடகத்தில் மயங்கி அந்த குடிகாரனையே திருமணம் செய்துகொண்டிருப்பார்கள்.

இந்த புரட்சிகரமான செய்தியை கேள்விப்பட்டு மற்ற பெண்களும் ஊர்மிளாவை பின்பற்றி வருகிறார்கள். இந்த சம்பவம் அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராம்ஷிலா சாஹுவை மிகவும் பாதித்தது.

அப்பெண்னை கௌரவப்படுத்தவும் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக காட்டவும் விரும்பிய அவர் ஊர்மிளாவை பெண்கள் மேம்பாட்டுக்கான தூதுவராக நியமித்துள்ளார்.

English summary
Women empowerment has finally taken to new heights of progress. Something which not only strengthens it, but finds a revolutionary stance for the women of our country. And all women of our country, not just urban, but rural too. With a reinvigorating news to shore up this process, here's the story of yet another braveheart.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X