For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மசூத் அகமது.. கடைசி பயங்கரவாதியும் என்கவுண்டர்.. ஜம்முவில் போலீஸ் அதிரடி தாக்குதலில் பலி!

ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: இருந்த ஒரே ஒரு கடைசி பயங்கரவாதியையும் நம் போலீசார் இன்று என்கவுண்ட்டர் செய்துவிட்டனர்.. அவர் பெயர் மசூத் அகமது.. இதையடுத்து, தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளே இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது, மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

நாட்டின் இறையாண்மைக்கு சவாலாக உள்ளதுதான் பயங்கரவாதம்.. ஜம்மு, காஷ்மீர் என்றாலே உள்ளுக்குள் நமக்கு உதறல் எடுத்துவிடும்.. அந்த அளவுக்கு அந்த பகுதிகளில் பயங்கரவாத நடமாட்டம் இருந்த காலம் உண்டு.. எனினும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில், ஜம்முவில் உள்ள தோடா என்ற மாவட்டம் முழுசுமே பயங்கரவாதிகளின் பிடியில்தான் இருந்தது.. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள ஆனந்த்நாக் மாவட்டத்தின் குல்சோகர் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

அமெரிக்காவை அடுத்து அமெரிக்காவை அடுத்து "சீனுக்குள்" வந்த ஜப்பான்.. இந்தியாவோடு சீக்ரெட் போர் பயிற்சி.. கலக்கத்தில் சீனா

அதிகாரிகள்

அதிகாரிகள்

இதையடுத்து, அதிரடியில் இறங்கினர் அதிகாரிகள்.. ஜம்மு & காஷ்மீரின் சிஆர்பிஎஃப் வீரர்களும் களம் இறங்கினர்.. இவர்கள் வருவதை அறிந்ததும் பயங்கரவாதிகள் உஷார் ஆனார்கள்.. ஆனால் நம் அதிகாரிகள் கொஞ்சமும் அசரவில்லை.. கடுமையான மோதல் பயங்கரவாதிகளுக்கும், நம் அதிகாரிகளுக்கும் நடந்தது..

தளபதி

தளபதி

அப்போது நடந்த தாக்குதலில் மொத்தம் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.. அந்த 3 பேரில் முக்கியமானவர் மசூத் அகமது என்பவர்தான்.. இவர், ஹிஸ்புல் முஜாஹிதீன் என்கிற பயங்கரவாத அமைப்பின் தளபதி ஆவார்.. இவருடன் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

என்கவுன்டர்

என்கவுன்டர்

இந்த என்கவுன்டர் குறித்து அம்மாநில காவல்துறை தலைவர் தில்பாக் சிங் சொல்லும்போது, "ஆனந்த்நாக் போலீசாரும், ராணுவ வீரர்களுடன் இணைந்து பயங்கரவாதிகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்... அப்போது, மசூத் அகமது உட்பட, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதி

பயங்கரவாதி

இந்த தோடா மாவட்டத்தில் மசூத் அகமதுதான் கடைசி பயங்கரவாதி ஆவார்.. இப்போது அவரும் என்கவுன்டர் செய்யப்பட்டுவிட்டதால், அப்பகுதி பயங்கரவாதிகள் இல்லாத பகுதியாக மாறியுள்ளது... கொல்லப்பட்ட அந்த மசூத் மீது ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கும் நிலுவையில் உள்ளது.. அனால் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் பிடிக்க முடியாமல் இருந்தது.

அதிகாரிகள்

அதிகாரிகள்

அதேசமயம், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பிலும் சேர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தார்.. தற்போது அவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுவிட்டார். 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த ஐந்தரை மாசத்தில் அதிகாரிகளால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்... 20 பேர் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.. 20 பேர் ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பை சேர்ந்தவர்கள்.

துப்பாக்கிகள்

துப்பாக்கிகள்

ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே அதிகாரிகள் இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில், ஏகே 47 துப்பாக்கி, 2 பிஸ்டல்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன" என்று காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

English summary
hizbul mujahideen commander masood encounter by jammu kashmir police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X