For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலைகளை உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை... மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

நாட்டின் சில பகுதிகளில் சிலை உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மாநில அரசுகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    எச்.ராஜாவின் கருத்தால் வெடித்த சர்ச்சை- வீடியோ

    டெல்லி : நாட்டின் சில பகுதிகளில் சிலை உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மாநில அரசுகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

    Home Ministry ordered States to take all necessary measures to prevent vandalism

    அதில் நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அகற்றப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. சிலை உடைப்பு சம்பவங்களை உள்துறை அமைச்சகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது, எனவே உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கைகளுக்கு பகிரங்க எதிர்ப்பை தெரிவிக்கிறது.

    மாநில அரசுகள் சிலை உடைப்பு சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எஎடுக்க வேண்டும். சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சிலைகள் உடைப்பு விவகாரம் குறித்து பிரதமர் அதிருப்தி தெரிவித்ததோடு இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

    English summary
    Home Ministry asks States to take all necessary measures to prevent vandalism, toppling of statues; HM letter says PM Modi also spoke to HM in this regard.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X