For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிருக்கு ஆபத்து... சாலை வழி பிரசாரத்தை தவிர்க்க மோடிக்கு உள்துறை அறிவுரை

உயிருக்கு ஆபத்து இருப்பதால் சாலை வழி பிரசாரத்தை தவிர்க்க பிரதமர் மோடிக்கு உள்துறை அறிவுறுத்தியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சாலை வழி பிரசாரத்தை தவிர்க்க மோடிக்கு அறிவுரை- வீடியோ

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சாலை வழி பிரசாரத்தை தவிர்க்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிதான் அனைவரின் குறியாவார். எனவே அவரது பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்குமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    மோடியின் உயிருக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. மேலும் மோடி சாலை வழி பிரசாரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

    உயிருக்கு ஆபத்து

    உயிருக்கு ஆபத்து

    இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் சில மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறுவதால் அதில் மோடி முக்கியமாக பிரசாரம் செய்வார். அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதால் சாலை வழி பிரசாரங்களை அவர் தவிர்க்க வேண்டும்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    மோடியின் அருகே அமைச்சர்கள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் அவர்களை அனுமதிக்க கூடாது. மேற்கண்டவர்கள் சிறப்பு பாதுகாப்பு படையினரால் சோதனைக்குட்படுத்தப்படுவர். மோடியின் பாதுகாப்பு தொடர்பாக புதிய வழிமுறைகள், விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

    எண்ணிக்கை அதிகரிப்பு

    எண்ணிக்கை அதிகரிப்பு

    தேவையில்லாமல் பிரதமருடன் யாரும் இருப்பதை அனுமதிக்கக் கூடாது என்று பிரதமருக்கு நெருங்கிய பாதுகாப்பு படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்திப்பையும் குறைத்துக் கொள்ள வேண்டும். பிரதமருக்கு பயணிக்கும் படைவீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    அதிகரிக்கப்பட வேண்டும்

    அதிகரிக்கப்பட வேண்டும்

    பிரதமருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது. ஆனால் பொது நிகழ்ச்சிகளில் சிறிது கவனமாக இருக்க அவரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு மாவோயிஸ்ட் இயக்கம் அச்சுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளதால் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ம.பி., ஒடிஸா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மற்ற மாநிலங்களைவிட உச்ச கட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

     புனே போலீஸார்

    புனே போலீஸார்

    பாதுகாப்பு அமைப்புகளும் கேரளத்தை சேர்ந்த இந்திய பாப்புலர் முன்னணி என்ற பயங்கரவாத அமைப்புகளை கண்காணிக்க வேண்டும் என்று தகவல்கள் கூறுகின்றன. ராஜீவ் காந்தியை போல் பிரதமர் மோடியையும் பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்ய மாவோயிஸ்ட் திட்டமிட்டுள்ளது குறித்த கடிதம் புனே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Home Minister sends a warning notice to all state police chiefs about the unknown severe threat to PM Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X