For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போஸ்ட் மார்டத்துக்கு கொண்டு செல்லும் முன் "என்.டி.ஆர் மகனுடன்" செல்ஃபி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    இறந்த என்.டி.ஆர் மகனுடன் செல்ஃபி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள் பணி நீக்கம்- வீடியோ

    ஹைதராபாத்: என்.டி.ராமாராவ் மகன் ஹரிகிருஷ்ணாவின் உடலுடன் செல்ஃபி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    என்டி ராமாராவின் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவராக இருந்தார். இவர் தனது ரசிகரின் திருமணத்துக்காக நெல்லூர் மாவட்டம் காவாலிக்கு காரில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நல்கொண்டா மாவட்டத்தில் நார்கெட்பள்ளி- அட்டங்கி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியனில் அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது.

    காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார்

    காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார்

    இதையடுத்து அவர் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டார். தலையில் ரத்த காயத்துடன் மயக்கமான நிலையில் சாலையில் கிடந்தார். ரத்தம் சொட்ட சொட்ட அவரை காமினேனி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    செல்ஃபி

    செல்ஃபி

    ஹரிகிருஷ்ணாவின் உயிரை காக்க மருத்துவர்கள் கடுமையாக போராடினர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மருத்துவர்கள் அறிவிப்புக்கு பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல அங்கு வந்த வார்டு பாயும், வார்டு பெண்ணும் , இரு செவிலியர்களும் இறந்த ஹரிகிருஷ்ணாவின் உடலுடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.

    ஊழியர்கள்

    ஊழியர்கள்

    வார்டு பாய் எடுத்த செல்ஃபிக்கு மற்ற 3 பேரும் சிரித்தபடியே போஸ் கொடுத்தனர். இந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இந்த 4 பேரையும் பணியிலிருந்து நீக்கியது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், இது துரதிருஷ்டவசமான சம்பவம். எங்கள் ஊழியர்களின் செயலுக்காக மிகவும் வருந்துகிறாம்.

    4 பேர் பணி நீக்கம்

    4 பேர் பணி நீக்கம்

    இந்த செல்ஃபி விவகாரம் குறித்து எங்கள் கவனத்துக்கு வந்ததும் அவர்கள் 4 பேரையும் பணியிலிருந்து நீக்கிவிட்டோம். அரக்கத்தனமான, மனிதாபிமானமற்ற செயலுக்காக அவரது குடும்பத்தினரிடம் வருத்தத்தை தெரிவித்து கொண்டோம் என்று தெரிவித்தனர்.

    English summary
    Kamineni hospital sacks 4 staffs for clicking selfie with Nandamuri Harikrishna's body. The hospital administration also asks apology to his family members.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X