For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னது பசு கோமாதாவா? முட்டாள்களே ஒரு விலங்கு எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்? கட்ஜூ 'பொளேர்

பசுவை கோமாதா என்பவர்கள் முட்டாள்கள்; ஒரு விலங்கு எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பினர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு விலங்கானது எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்? பசுவை கோமாதா என்பவர்கள் முட்டாள்கள் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக அரசு அமைத்த மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கிலான மாட்டிறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் மாடுகளை வதைப்பவர்களின் முட்டிகள் உடைக்கப்படும் என்ற கருத்துகளையும் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர்.

 How can be animal be a mother of human? Markandeya katju

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமான் சிங், பசு வதைப்பாளர்கள் தூக்கில் தொங்கவிடப்படுவர் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மார்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், நாய், குதிரை போன்று பசுவும் வெறும் விலங்குதான்.

பசுவை கோமாதா என்பவர்கள் முட்டாள்கள். ஒரு விலங்கு எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்.எருது, ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவற்றின் பாலை குடிக்கிறோம். அவைகளும் நமக்கு தாயா? என்றும் கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
I regard those hu regard cow 'gomata' idiots. How can animal be mother of human?We drink milkofgoat,buffalo,camel. Are they too mata? says Markandeya Katju.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X