For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங். - ஜேடிஎஸ் கூட்டணி குறித்து பாஜக பேச அருகதை இருக்கா?

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவா, மேகாலயா ‘ஆடுபுலி ஆட்டத்தை’ கர்நாடகாவில் அரங்கேற்றுமா பாஜக?- வீடியோ

    பெங்களூரு: கோவா, மணிப்பூரில் பாஜக நடந்து கொண்ட விதத்தை அக்கட்சி திரும்பிப் பார்க்க வேண்டும். அதற்கு விளக்கம் கொடுத்து விட்டு கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் கூட்டணி குறித்து அக்கட்சி விமர்சிக்கலாம் என்று மக்கள்கோபத்துடன் கூறுகின்றனர்.

    மக்கள் மாற்றத்துக்காகவே வாக்களித்துள்ளனர் என்று கர்நாடக பாஜக கூறுகிறது. ஆனால் கோவா, மணிப்பூரில் நடந்தது மட்டும் என்ன.. அங்கும் மாற்றத்துக்காகத்தானே மக்கள் வாக்களித்தனர். ஆனால் பாஜக எப்படி நடந்து கொண்டது அங்கே? சற்றே மனசாட்சியுடன் திரும்பிப் பார்க்க வேண்டும்.

    உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்திரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றன. இதில் உ.பியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. பஞ்சாப் காங்கிரஸ் வசமானது. மணிப்பூர், கோவாவில் இழுபறி ஏற்பட்டது.

    இரு மாநிலங்களிலும் காங்.

    இரு மாநிலங்களிலும் காங்.

    இரு மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் தனிப் பெரும் கட்சியாக வந்தது. அதாவது கோவாவில் காங்கிரஸ் 17, பாஜக 13 இடங்களில் வென்றன. மணிப்பூரில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 20 தொகுதிகளிலும் வென்றன. இரு மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் தனிப் பெரும் கட்சியாகும்.

    குறுக்கு சால் ஓட்டிய பாஜக

    குறுக்கு சால் ஓட்டிய பாஜக

    ஆனால் இரு மாநிலங்களிலும் பணத்தை களமிறக்கி பாஜக ஆட்சியைப் பிடித்தது. சுயேச்சைகள், சிறிய கட்சிகளை வளைத்து ஆட்சியைப் பிடித்தது. தனிப் பெரும் கட்சியாக வந்தும் கூட காங்கிரஸை உதாசீனப்படுத்தியது பாஜக. சட்டமும் துணை நின்றது பாஜகவின் செயலுக்கு.

    இப்போது நியாயம் பேசுவது எப்படி

    ஆனால் இன்று கர்நாடகத்தில் அதற்கு பெரிய ஆப்பு வைத்திருக்கிறது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் திடீர் கூட்டணி. பாஜக தனிப் பெரும் கட்சியாக வந்தும் கூட கோவா, மணிப்பூரில் அது செயல்பட்டதற்கு தண்டனையாக இன்று பாஜகவை ஆட்சியமைக்க விட முடியாத அளவுக்கு காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் இறுக்கமாக ஒருங்கிணைந்துள்ளன.

    இப்ப புலம்புனா எப்படி

    இப்ப புலம்புனா எப்படி

    இப்படி தார்மீக நெறிமுறைகளையெல்லாம் தூக்கிப் போட்டு மிதித்து நாஸ்திப்படுத்திய பாஜக, கர்நாடகத்தில் மட்டும் புலம்புவது ஏன். அதில் லாஜிக்கும் இல்லையே. தங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா.. என்று மக்கள் கேட்கிறார்கள்.

    English summary
    People are wondered how Can BJP speak of morality of JDS- Congress alliance. They ask that What BJP did in Goa and Manipur?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X